இன்று ஆடி மாதம் பிறந்தது: ஈரோடு மாவட்ட கோவில்களில் விசேஷ பூஜை || today aadi matham erode district temple devotees worship
Logo
சென்னை 22-11-2014 (சனிக்கிழமை)
இன்று ஆடி மாதம் பிறந்தது: ஈரோடு மாவட்ட கோவில்களில் விசேஷ பூஜை
இன்று ஆடி மாதம் பிறந்தது: ஈரோடு மாவட்ட கோவில்களில்
 விசேஷ பூஜை
ஈரோடு, ஜூலை. 16-

ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக விளங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு மாதமும் அம்மன் கோவில்களில் அதிகமாக பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த சிறப்பு மிக்க ஆடி மாதம் இன்று (திங்கட்கிழமை) பிறந்தது. ஆடி மாதம் 1-ந் தேதியாகிய இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷ அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தது.

ஈரோடு பெரிய மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் போன்ற அம்மன் கோவில்களிலும் மற்றும், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - ஈரோடு