புதுவைக்கு 82 மெகாவாட் கூடுதல் மின்சாரம் || 82 mehawat electric to puduvai
Logo
சென்னை 28-07-2014 (திங்கட்கிழமை)
புதுவைக்கு 82 மெகாவாட் கூடுதல் மின்சாரம்
புதுவைக்கு 82 மெகாவாட் கூடுதல் மின்சாரம்
புதுவை பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
 
புதுவையில் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தரமான மின்சாரம் வழங்க அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 67 மெகாவாட் மின்சாரமும், நெய்வேலி விரிவாக்க அனல் மின் நிலையத்திலிருந்து 15 மெகாவாட் மின்சாரமும் புதுச்சேரிக்கு இந்த நிதியாண்டில் கிடைக்கும்.
 
இந்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படும் தனியார் தொழில்முனைவர் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் ஒரு மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையம் காரைக்காலில் அமைக்கப்படும்.
 
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுமையும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டண நிர்ணயம் செய்தபின் காரைக்கால் பகுதியின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி