புதுவை பட்ஜெட்: பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப் டாப் || puduvai budget laptop to plus two students
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
  • உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்து 296/5 (47)
  • தமிழகம், புதுவையில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது
  • கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
புதுவை பட்ஜெட்: பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப் டாப்
புதுவை பட்ஜெட்: பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப் டாப்
பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் :-
 
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாநில வள மையம் ஒன்று அமைக்கப்படும். பள்ளி கல்வியை மேம்படுத்த கல்விக்கென பிரத்யேகமாக தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படும்.
 
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, அரசு பள்ளிகளில் முதல் மற்றும் 2-வது மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் ஊக்கப் பரிசாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 
சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பின்னரும் கைகளை கழுவி சுகாதாரமாக இருக்கும் வகையில் மாணவர்களுக்கு சோப்பு வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டிலிருந்து பிளஸ்-2 பொதுத் தேர்வில் 75 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெறும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்படும்.
 
சானிடரி நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்றிடும் வகையில் பள்ளிகளில் இன்சினிரேட்டர் கருவி பொருத்தப்படும். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று அமல்படுத்தப்படும். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

amarprakash160600.gif
amarprakash160600.gif