சட்டசபை 20 ந்தேதி வரை ஒத்திவைப்பு || puduvai assembly secretriat postpone july 20
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
சட்டசபை 20-ந்தேதி வரை ஒத்திவைப்பு
சட்டசபை 20-ந்தேதி வரை ஒத்திவைப்பு
சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் உரையை தாக்கல் செய்தபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியதோடு வெளிநடப்பு செய்தனர்.
 
அதே வேளையில் பல்வேறு பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
 
ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பார்த்து ஆவேசமாக பேசியபோதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புன்முறுவதுடனே இருந்தனர். ஜனாதிபதி தேர்தலை முன் நிறுத்தியே காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமைதி காத்ததாக கூறப்படுகிறது.
 
கடந்த மார்ச் மாதம் கவர்னர் சட்டசபைக்கு உரை நிகழத்த வந்தபோது அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
 
முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்-அமைச்சர் 1.15 மணிக்கு பட்ஜெட் உரையை படித்து முடித்தும் சபாநாகயர் சபாபதி வருகிற 20-ந்தேதி வரை சபையை ஒத்திவைத்தார். மீண்டும் 21-ந்தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவித்தார்.
 
இடையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் 4 நாட்களுக்கு சட்டசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 21-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 8 நாட்கள் சட்டசபை கூட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
 
புதுவையில் கடந்த ஜனவரி மாதம் பல்வேறு பொருட்களுக்கு வாட்வரி விதிக்கப்பட்டது. இந்த வாட்வரி உயர்வினால் தொழில்கள் மற்றும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொழில் அதிபர்கள் சந்தித்து முறையிட்னடர்.
 
இதையடுத்து பட்ஜெட்டில் வாட்வரி ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில் வாட்வரி ரத்து குறைத்தோ, வாட்வரி குறைப்பு குறைத்தோ எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
 
இது வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif