அசாம் மாணவன் பீகாரில் கொலை: விசாரணை நடத்த நிதிஷ் குமார் உத்தரவு || assam student killed enquiry order nitish kumar
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
அசாம் மாணவன் பீகாரில் கொலை: விசாரணை நடத்த நிதிஷ் குமார் உத்தரவு
அசாம் மாணவன் பீகாரில் கொலை: விசாரணை நடத்த நிதிஷ் குமார் உத்தரவு
பகல்பூர், ஜூலை 16-

அசாம் மாநிலம் சில்சார் பகுதியைச் சேர்ந்த ப்ரீதம் பட்டாச்சார்ஜி என்ற பி.எச்டி மாணவன், கடந்த 9ம் தேதி பரீட்சை எழுதுவதற்காக கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்றுள்ளான். அந்த இரயில் பீகாரின் பகல்பூர் அருகே நாகசியா என்னுமிடத்தில் வந்தபோது,  திருட்டு கும்பல் ஒன்று அவனை தாக்கி அவனிடமிருந்த டிஜிட்டல் கேமரா மற்றும் படிப்பு சம்பந்தமான சான்றிதழ்கள் அனைத்தையும் பறித்துச் சென்றுவிட்டது.

அதனை மீட்பதற்காக அங்கு இறங்கிய அவன், கொள்ளையர்களை துரத்தி சென்று இருக்கிறான். பின்னர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்திருக்கிறான். போலீஸ் நிலையத்தில் அவனுக்கு ஒரு கப் தேநீரும் வழங்கி விசாரிக்கப்பட்டிருக்கிறான். பின்னர் நடந்த விவரங்கள் அனைத்தையும் அவன் வீட்டில் தெரியப்படுத்தியிருக்கிறான். ஆனால் பிறகு அவனை பெற்றோர்கள் தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

அவனுடன் பேசமுடியாத பெற்றோர் அடுத்த நாள் நாகசியா காவல் நிலையத்தை அணுகி அவனை மீட்டுத்தர வேண்டி புகார் செய்துள்ளனர். அப்போது அவன் டெல்லி சென்றிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு நாட்களாகியும் அவனை காணாத பெற்றோர்கள் பரிதவிப்பில் இருந்தனர். கோபத்துடன் இது குறித்த எந்தவித உதவியும் விவரங்களும் எங்களுக்கு கிடைக்க வில்லை என்று கூறினார்.

இந்நிலையில், அவனது உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பகல்பூர் இரயில்வே பாலத்தின் கீழே கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாகசியா காவல் நிலையத்தில் இருந்து சென்ற அவன் கடத்தப்பட்டது தெரியவந்தது. கடத்தப்பட்ட மாணவனுக்கு அதிகமாக போதை பொருட்கள் கட்டாயமாக கொடுத்துள்ளனர். இதனால் அவன் இறந்துள்ளான். பின்னர் அவனை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இறந்த 12 மணி நேரத்திற்கு பிறகே அவனது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இதுதொடர்பாக இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுபற்றிய செய்தி முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு தெரிய வந்ததும், உடனடி விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்துகிறது: பா.ஜ.க

மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது நிலம் வழங்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. காங்கிரஸ் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif