ராஜபாளையத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா: எம்.பி எம்.எல்.ஏ. பங்கேற்பு || rajapalayam kamarajar birthday MPS MLAS inagurate
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது
  • காஞ்சிபுரம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை
  • மத்திய குழு சென்னை வந்தது: முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது
ராஜபாளையத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா: எம்.பி-எம்.எல்.ஏ. பங்கேற்பு
ராஜபாளையத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா: எம்.பி-எம்.எல்.ஏ. பங்கேற்பு
ராஜபாளையம், ஜூலை 16-

ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ராம சாமி, நகர செயலாளர் ரவி, துணை செயலாளர் கோவிந்தன், சுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், டாக்டர் இளங்கோவன், கோவிந்தன், கோதண்டராமன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் மாவட்ட பேரவை செயலாளர் செல்வசுப்பிரமணியராஜா, நகர் மன்ற துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம், நகர்மன்ற உறுப்பினர்கள் வனராஜ், நாகராஜ், முருகேசன், லிங்காமுருகன், கோபாலகிருஷ்ணன், கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மேலும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முருகையாபாண்டியன் தலைமையில் யூனியன் சேர்மன் பொன்னுத்தாய் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் டைகர் சம்சுதீன் தலைமையில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

முகவூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு செட்டியார்பட்டி தி.மு.க. பேரூர் செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விருதுநகர்