சென்னை துறைமுக கன்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக் || chennai harbourt container lorry strike
Logo
சென்னை 24-10-2014 (வெள்ளிக்கிழமை)
சென்னை துறைமுக கன்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்
சென்னை துறைமுக கன்டெய்னர் லாரிகள் ஸ்டிரைக்
ராயபுரம், ஜூலை. 16-
 
சென்னை துறைமுகத்துக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான லாரிகள் சரக்குகள் ஏற்றி வருவதும், இங்கிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்வதுமாக உள்ளன. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் காளன் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
 
அதில், சென்னையில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் உள்ளன. ஆனால் சரக்குகள் கொண்டு வருவதற்கும், ஏற்றிச் செல்வதற்கும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதை கண்டித்தும், சென்னை லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
 
அதன்படி, சென்னையைச் சேர்ந்த கன்டெய்னர் லாரிகள் இன்று காலை முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால் மற்ற மாநில, மாவட்ட கன்டெய்னர் லாரிகளும், துறைமுகத்துக்குள் செல்லவோ, சரக்குகளை ஏற்றிக் கொண்டு வரவே முடியவில்லை. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள லாரிகளுடன் சேர்ந்து மற்ற லாரிகளும் அணிவகுத்து நிற்கின்றன. துறைமுக ஜீரோ கேட் தொடங்கி எண்ணூர் வரை ஆயிரக்கணக்கான லாரிகள் அணி வகுத்து நிற்கின்றன. லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை துறைமுக கழக சேர்மன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தமிழ்நாட்டில் தீபாவளித் தினத்தன்று காற்று, ஒலி மாசு அதிகரிப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தமிழகத்தில் தீபாவளித் தினத்தன்று காற்று மாசு, ஒலி மாசு அதிகரித்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif