விருகம்பாக்கத்தில் மாடியில் இருந்து தள்ளி அக்காள் கணவரை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது || auto driver arrested sister husband killed
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
விருகம்பாக்கத்தில் மாடியில் இருந்து தள்ளி அக்காள் கணவரை கொன்ற ஆட்டோ டிரைவர் கைது
விருகம்பாக்கத்தில் மாடியில் இருந்து தள்ளி அக்காள் கணவரை கொன்ற
 ஆட்டோ டிரைவர் கைது
சென்னை, ஜூலை. 16-

சாலிகிராமம் சண்முக சுந்தரம் தெருவில் வசித்து வந்தவர் செல்லதுரை. தச்சுத் தொழிலாளியான இவரும் மைத்துனர் சுரேசும் (மனைவியின் தம்பி) நேற்று இரவு வீட்டின் முதல் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சுரேஷ், செல்லதுரையை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செல்லதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயற்சி நடந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று காலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த அமைச்சர்

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவி வகித்த 19 அமைச்சர்களில் 18 பேர்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் ....»

VanniarMatrimony_300x100px_2.gif