அரசு பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் || government school teachers transfer couselling
Logo
சென்னை 31-01-2015 (சனிக்கிழமை)
அரசு பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்
அரசு பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்
சென்னை, ஜூலை. 16-
 
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ- ஆசிரியர் விகிதாச்சாரத்தை விட ஆசிரியர்கள் அதிக அளவில் பணிபுரிவது தெரிய வந்தது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றி வருகிறார்கள். அதேவேளையில் பல பள்ளிகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையும் உள்ளது.
 
கூடுதலாக பணியாற்றும் ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கான பணி நிரவல் கவுன்சிலிங் இன்று நடந்தது. சென்னை அசோக்நகர் அரசு மேல் நிலைப்பள்ளியில் இணை இயக்குனர்கள் ராஜராஜேஸ் வரி, கண்ணப்பன், உஷா ராணி, உமா ஆகியோர் கலந்தாய்வை நடத்தினார்கள்.
 
அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மிகுதியாக பணிபுரிந்த ஆசிரியர்- ஆசிரியைகள் இதில் பங்கேற்றனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலி இடங்கள் இல்லாததால் இங்கு பணி புரிந்த ஆசிரியர்கள் வேறு மாவட் டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்க வந்தவர்களுக்கு விரும்பிய இடம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரி யர்கள் காலி பணியிடம் உள்ளது.
 
இந்த இடங்கள் கலந்தாய்வுக்கு பிறகு புதிய ஆசிரியர்களை நியமிப்பார்கள். கலந்தாய்வுக்கு வந்த சில ஆசிரியைகள் கூறும்போது, எங்களை திடீரென உபரி ஆசிரியர்களாக கருதி வெளியேற்றி விட்டார்கள். இதனால் தற்போது வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் தவிக்கிறோம். பள்ளி, கல் லூரிகளில் குழந்தைகளை சேர்த்து விட்டதால் இப்போது இடமாறுதல் என்பது சிரமமாக உள்ளது. இதனால் இந்த ஆண்டை ரத்து செய்து விட்டு அடுத்த ஆண்டு மாறுதல் அளித்தால் உதவியாக இருக்கும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நீதிபதியை தரக்குறைவாக பேசிய விவகாரம்: மார்க்சிஸ்ட் கம்யூ. தலைவருக்கு 4 வார சிறை

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் எம்.வி.ஜெயராஜன். முன்னாள் எம்.எல்.ஏ.வான ....»