ஜெயலலிதா நடவடிக்கையால் 10 மீனவர்கள் மீட்பு: சொந்த ஊர் திரும்பினார்கள் || jayalalitha action fisherman coming village
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
ஜெயலலிதா நடவடிக்கையால் 10 மீனவர்கள் மீட்பு: சொந்த ஊர் திரும்பினார்கள்
ஜெயலலிதா நடவடிக்கையால் 10 மீனவர்கள் மீட்பு: சொந்த ஊர் திரும்பினார்கள்
சென்னை, ஜூலை. 16-

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு ஒன்று, 10 மீனவர்களுடன் 12-07-2012 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றது. அப்படகு அன்றே கரைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அப்படகு கரைக்கு திரும்பாததால், காணாமல் போனதாக தகவல் பெறப்பட்டது.

காணாமல் போன படகு மற்றும் 10 மீனவர்களையும் உடனடியாக தேடிக்கண்டு பிடித்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதின் பேரில், கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளுடன் தொலை பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டு மீனவர்களை தேடும் பணி மீன்வளத்துறையால் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே 10 மீனவர்கள் மற்றும் படகும் இலங்கைக்குட்பட்ட பகுதியில் இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டதாக அறியவந்தது. இந்திய கடலோர காவற்படை, கொழும் பிலுள்ள கடலோர மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்பு கொண்டு இதனை உறுதிபடுத்திய பின்னர், அகல்யாபாய் என்ற கப்பலை அனுப்பி, மீனவர்களையும், படகினையும் மீட்டு, தூத்துக்குடி மீன் பிடிதுறைமுகத்திற்கு இன்று அதிகாலை கொண்டு சேர்த்தது. 10 மீனவர்களும் சின்ன முட்டம் சென்றடைந்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக, மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

அவசர மருத்துவ உதவி அளிக்க மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டம்: ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ உதவிக்கு தற்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif