திருவேற்காடு அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கொன்று கால்வாயில் புதைத்த பேராசிரியர் || wife killed Professor thiruverkadu
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
திருவேற்காடு அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கொன்று கால்வாயில் புதைத்த பேராசிரியர்
திருவேற்காடு அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கொன்று கால்வாயில் புதைத்த பேராசிரியர்
பூந்தமல்லி, ஜூலை.16-

நாமக்கல் மாவட்டம் காளிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். சென்னை படப்பையில் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜனுக்கும் மோகனூர் அரசநத்தத்தை சேர்ந்த விஜயலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த மாதம் 6-ந் தேதி விஜயலட்சுமி சேலத்தில் உள்ள தோழி வீட்டு திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்றார். அப்போது 22 பவுன் நகைகளையும் அணிந்து இருந்தார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுபற்றி பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். வரதட்சணை கேட்டு நடராஜனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அவர்கள் விஜயலட்சுமியை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் கணவர் நடராஜன், அவரது பெற்றோர் மற்றும் தங்கை உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி நடராஜன் திடீரென நாமக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் விஜயலட்சுமியை கொன்று புதைத்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதனால் மனைவியை நான் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தேன். ஆனால் கள்ளக்காதல் விவகாரம் என் மனைவிக்கு எப்படியோ தெரிந்து விட்டது. இதனால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.

சம்பவத்தன்று விஜயலட்சுமியிடம் நைசாக பேசி சென்னைக்கு அழைத்து வந்தேன். பின்னர் அவரை கொன்று பிணத்தை திருவேற்காடு அருகே காட்டுப்பாக்கம் செல்லியம்மன் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் புதைத்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உதய குமார் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் இன்று நடராஜனை அழைத்துக் கொண்டு சென்னை வருகின்றனர். கொலை செய்து புதைக்கப்பட்ட விஜயலட்சுமியின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.

விஜயலட்சுமியை, நடராஜன் கொன்று புதைத்ததாக கூறப்படும் கிருஷ்ணா கால்வாய் புதர் மண்டி காணப்படுகிறது. சென்னைக்கு அழைத்து வந்த பின்னர் தான், விஜயலட்சுமியை நடராஜன் கொலை செய்து உடலை மூட்டை கட்டி கிருஷ்ணா கால் வாய்க்கு எடுத்து வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

நடராஜன் மட்டும் இக் கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கருதப்படுகிறது. மதுரவாயலில் உள்ள ஒரு கல்லூரியில்தான் நடராஜன் படிப்பை முடித்துள்ளார். பின்னர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால் காட்டுப்பாக்கம் பகுதியில் அவருக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இவர்களில் சிலரும், விஜயலட்சுமியை கொலை செய்ய உதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

நடராஜன், மனைவியை கொலை செய்துவிட்டு, கள்ளக்காதலனுடன் அவர் ஓடிவிட்டதாக நாடகமாடிய தும் தெரியவந்துள்ளது. நடராஜனின் கள்ளக் காதலி எம்.டெக் முடித்துள்ளார். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமியின் கொலை தொடர்பாக அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விஜயலட்சுமி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம், காட்டுப்பாக்கம் பகுதியில் இன்று காலையில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

section1

திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை பகுதிகளில் மத்திய குழு இன்று ஆய்வு

தமிழக வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினர் நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச் ....»

MudaliyarMatrimony_300x100px.gif