இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 101 தமிழர்கள் சிங்கள கடற்படையினரால் கைது || 101 srilankan tamilians arrested when escaping to australia
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 101 தமிழர்கள் சிங்கள கடற்படையினரால் கைது
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 101 தமிழர்கள் சிங்கள கடற்படையினரால் கைது
கொழும்பு, ஜூலை 16-

ஆஸ்திரேலியா நாட்டில் குடியேறுவதற்காக, இலங்கையில் இருந்து 134 பேர் ஒரு மீன்பிடி படகில் சென்று கொண்டு இருந்தனர். கல்முனையில் இருந்து 46 மைல் தொலைவில் நடுக்கடலில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்களுடைய படகை சுற்றி வளைத்து மடக்கி, அதில் இருந்த அனைவரையும் கைது செய்து மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 101 பேர் தமிழர்கள் என்றும், 8 பேர் சிங்களர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இதேபோல் இலங்கையின் மேற்கு கடற்கரையில் சில்லா என்ற இடத்தில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த 22 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை கொழும்பு நகரில் தெரிவித்த இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கோசலா வர்ணகுலசூரியா தெரிவித்தார்.

கடந்த மே மாதம் இறுதியில் இருந்து இதுவரை இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற 400 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹனா தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

தைவானில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன - குழந்தை உள்பட 3 பேர் பலி

தைவான் நாட்டின் தென்பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்பட ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif