பிரெட்லீயை எதிர்கொண்டு ஆடியது சந்தோஷம்: ஓய்வு பெற்ற பிரெட்லீக்கு சச்சின் புகழாரம் || Sachin praises Brett Lee
Logo
சென்னை 03-06-2015 (புதன்கிழமை)
  • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு
  • ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
  • 92–வது பிறந்த நாள் விழா: ராயப்பேட்டை பொதுக்கூட்டத்தில் கருணாநிதி இன்று பேசுகிறார்
பிரெட்லீயை எதிர்கொண்டு ஆடியது சந்தோஷம்: ஓய்வு பெற்ற பிரெட்லீக்கு சச்சின் புகழாரம்
பிரெட்லீயை எதிர்கொண்டு ஆடியது சந்தோஷம்: ஓய்வு பெற்ற பிரெட்லீக்கு சச்சின் புகழாரம்
புதுடெல்லி, ஜுலை.16-
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிரெட்லீக்கு, இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இது குறித்து தெண்டுல்கர் டுவிட்டர் இணையதளத்தில் எழுதி இருக்கும் பாராட்டில், `எங்களது வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், உங்கள் வருங்காலம் வளமாக அமையவும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிரெட்லீ வீசிய பந்துகளை எதிர்கொண்டு ஆடியது சந்தோஷமாக இருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். தெண்டுல்கரின் பாராட்டுக்கு பிரெட்லீ பதிலளிக்கையில், `உங்களுக்கு எதிராக பந்து வீசியது எனக்கும் மகிழ்ச்சியை தந்தது. களத்தில் கடும் போட்டியை ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக என்னுடைய முழு திறமையும் வெளிக்கொண்டு வர வைத்தீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
 
இதேபோல் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ள யுவராஜ்சிங்கும், பிரெட்லீயை பாராட்டி இருக்கிறார். `பிரெட்லீயின் பந்து வீச்சு எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாகும். அவர் மேட்ச் வின்னர் சாம்பியன். உலகத் தரம் வாய்ந்த வீரர் மட்டுமின்றி, நல்ல நண்பரும் ஆவார். ஒரு நல்ல மனிதர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது வருத்தம் அளிக்கிறது. 2004-ம் ஆண்டில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பிரெட்லீ மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்து வீச்சு மறக்க முடியாததாகும்' என்று கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் வரை ரொக்கமாக செலுத்தலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் எம்.சாய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மின் நுகர்வோர் ....»