நாளை மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்: பா.ம.க. நடத்துகிறது || PMK strikes vs Tasmac tomorrow
Logo
சென்னை 21-08-2014 (வியாழக்கிழமை)
நாளை மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்: பா.ம.க. நடத்துகிறது
நாளை மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம்: பா.ம.க. நடத்துகிறது
சென்னை,ஜுலை.16-
 
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மதுவின் தீமைகள் பெருகிவிட்டதை அடுத்து தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுபோடும் அறப்போராட்டத்தை கடந்த ஜுலை 11-ந் தேதி நடத்துவதென பா.ம.க. நிர்வாகக்குழு கூட்டத்திலும், செயற்குழு கூட்டத்திலும் முடிவெடுக்கப்பட்டது.
 
அதன்பின்னர், பா.ம.க. இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வாரத்திற்கு துக்கம் கடைபிடிக்கப்பட்டதால் இப்போராட்டம் ஜுலை 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 6172 மதுக்கடைகள் முன்பும் 17-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுபோடும் அறவழி போராட்டம் நடைபெற உள்ளது.
 
சென்னை தியாகராயநகர் தெற்கு போக் சாலையில் ம.பொ.சி. சிலைக்கு எதிரில் உள்ள மதுக்கடைக்கு முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையேற்கிறார். காஞ்சீபுரத்தில் பா.ம.க. இளைஞரணி செயலாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஒடிசாவில் மதிய உணவை சாப்பிட்ட 300 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு

ஒடிசாவில் ஆந்திர எல்லையோரம் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் மதிய உணவை சாப்பிட்ட 300 மாணவர்களுக்கு உடல்நலக் ....»