ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியிலும் எனக்கு ஆதரவு கிடைக்கும்: சங்மா || Sangma says he will be supported by congress voters too in Prezidential poll
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியிலும் எனக்கு ஆதரவு கிடைக்கும்: சங்மா
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியிலும் எனக்கு ஆதரவு கிடைக்கும்: சங்மா
புவனேஸ்வர்,ஜுலை.16-
 
இம்மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மாவும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில், பி.ஏ.சங்மா நேற்று ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் நிருபர்களிடையே பேசுகையில் அவர் கூறியதாவது:- எனக்கு இதுவரையில் 18 கட்சிகள் ஆதரவு அளித்து உள்ளன. இன்னும் முடிவை அறிவிக்காத சில கட்சிகளின் ஆதரவும் எனக்கு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். அதேபோன்று, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் என்னை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
 
இந்த ஜனாதிபதி தேர்தல் கட்சி வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நடைபெற உள்ளது. எந்தவிதமான தடை உத்தரவுகளோ, கொறடா உத்தரவுகளோ அல்லது எழுத்து மூலமான கட்டளைகளோ கிடையாது. அவ்வாறான உத்தரவுகளைப் பிறப்பிப்பவர்கள் எவரும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
 
எனவே, தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி வரையறைகளின்படி வாக்களிக்காமல் தங்களுடைய சொந்த விருப்பத்தின்படி வாக்களிப்பார்கள் என்பதால் எனக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அதேபோன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
 
கடந்த 1969-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்டவரை வி.வி.கிரி தோற்கடித்து வெற்றி பெற்றதைப் போலவே, இந்த தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு பி.ஏ.சங்மா தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் இன்று சந்திப்பு

தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய சட்டமன்றத்தின் பதவி காலம் மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif