பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகாரை தொடர்ந்து வேலூர் கோட்டையில் கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு || vellore collector research fort
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
  • ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை 1-0 என புனே வீழ்த்தியது
  • சென்னை மாநகர காவல்துறை புதிய ஆணையராக டி.கே. ராஜேந்திரன் நியமனம்
பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகாரை தொடர்ந்து வேலூர் கோட்டையில் கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு
பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகாரை தொடர்ந்து வேலூர் கோட்டையில் கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு
வேலூர், ஜூலை.15-

வேலூர் கோட்டை பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியது. முதல் இந்திய சுதந்திர போர் வித்திடுவதற்கு முக்கிய சம்பவமாக சிப்பாய் கலகம் நிகழ்ந்ததும் இங்கே தான். வேலூர் கோட்டையை பார்ப்பதற்கும், கோட்டையை சுற்றியுள்ள மதில் சுவர்களையும், அகழியில் படகு சவாரி செய்து, பொழுதை போக்குவதற்கும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க கோட்டையில், மதில் சுவரை சுற்றி வளர்ந்து உள்ள முட்புதர்களில் விரும்பதகாத செயல்கள் தினமும் நடந்து வருவதாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாக மெல்ல மெல்ல மாறி வருவதாகவும் மாவட்ட கலெக்டர் அஜய் யாதவுக்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் கோட்டையில் கலெக்டர் அஜய்யாதவ் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் சீனி அஜ்மல்கான், கட்டிடக்கலை நிபுணர் ஆசைதம்பி, வேளாண்மை பொறியாளர் ஸ்ரீதர், அருங்காட்சியக காப்பாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். மின்னல் வேகத்தில் வந்த கலெக்டர் கோட்டையை சுற்றியுள்ள மதில் சுவர்களை நடந்தே ஆய்வு செய்தார்.

மதில் சுவரின் ஒவ்வொரு பகுதியிலும் சென்று அந்த பகுதி இப்போது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கோட்டை மதில் சுவர்களுக்கிடையே வளர்ந்துள்ள செடி, கொடிகளுக்கிடையே சென்று அவர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அங்கே கிடந்த மது பாட்டில்கள், ஆணுறைகள் கிடந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த பகுதியில் செடி, கொடிகளை உடனே அகற்றி பாதுகாப்பான பகுதியை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டுக்கொண்டார். கோட்டையின் வரலாற்றை சுற்றுலா பயணிகளுக்கு விளக்கும் வகையில் ஒலி&ஒளி காட்சி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கலெக்டர் அஜய்யாதவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் திடீர் ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கோட்டை குறித்து பொது மக்களிடம் இருந்து புகார்கள் தொடர்பாக கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் கோட்டையில் 20 இடங்களிலும், அகழி சுற்றுச்சுவர்களிலும் ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் எல்.இ.டி. அலங்கார விளக்குகள் பொருத்தப்படுகிறது. அது குறித்தும் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த பணி தன்னிறைவு திட்டம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. இங்கு அமைக்கப்படும் அலங்கார விளக்குகள் கோட்டையின் மீது வீரர்கள் நிற்பது போல் தெரியும். மேலும் அது அகழியிலும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிவறைகளை நவீனப்படுத்தவும் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - வேலூர்

section1

அணைக்கட்டு அருகே இளம்பெண்ணை கடத்தியதாக பெயிண்டர் மீது புகார்

அணைக்கட்டு, அக்.9–அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமுதா. இவரது மகள் பிரேம்குமாரி (வயது 19). ....»

VanniarMatrimony_300x100px_2.gif