கண்டமங்கலம் அருகே அம்பேத்கார் சிலை உடைப்பு: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு || kandamangalam ambedkar statue damaged police search secret gang
Logo
சென்னை 21-08-2014 (வியாழக்கிழமை)
  • அமீத் ஷா இன்று ஐதராபாத் வருகை
  • சென்னை: ஆவடி அருகே பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 4 பேர் பலி
  • பீகார் - கர்நாடகாவில் 13 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
கண்டமங்கலம் அருகே அம்பேத்கார் சிலை உடைப்பு: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
கண்டமங்கலம் அருகே அம்பேத்கார் சிலை உடைப்பு: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
கண்டமங்கலம், ஜூலை.15-
 
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த வனத்தாம்பாளையம் கிராம எல்லையில் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள காலனி பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த இந்த சிலை திறப்பு விழாவுக்காக காத்திருந்தது.
 
நேற்று நள்ளிரவில் மர்ம கும்பல் இந்த சிலையை அடித்து உடைத்தது. இதில் சிலையின் கைவிரல் உடைந்து சேதமானது. பின்னர் அந்தபகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயர்பலகையையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றனர். இன்று காலையில் இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் காலனி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கார் சிலை பகுதியில் அவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுபற்றி தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று அமைதி ஏற்படுத்தினர். அம்பேத்கார் சிலையை உடைத்தது குறித்த புகாரின் பேரில் மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விழுப்புரம்