விடுதலைப்புலிகளுக்கு தடை நீடிப்பு: டெசோ மாநாடு நடைபெறுமா? || p chidamparam meet with karunanidhi
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
விடுதலைப்புலிகளுக்கு தடை நீடிப்பு: டெசோ மாநாடு நடைபெறுமா?
விடுதலைப்புலிகளுக்கு தடை நீடிப்பு: டெசோ மாநாடு நடைபெறுமா?
சென்னை, ஜூலை 17-
 
இலங்கை தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காக டெசோ அமைப்பை மீண்டும் தொடங்கி இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் அமைவதை வற்புறுத்தும் வகையில் டெசோ மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. விழுப்புரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்ட இந்த மாநாடு தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்டு 12-ந்தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
 
இந்த நிலையில், விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை மத்திய உள்துறை வெளியிட்டுள்ளது.
 
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய முன்னணி அரசியல் தலைவர்கள், மூத்த அதிகாரிகளே காரணம் என்று, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை விடுதலைப்புலிகள் அமைப்பு பரப்பி வருகிறது. இது இந்திய தலைவர்களின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
 
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகளின் செயல்பாடுகள் மத்திய அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. தமிழ் ஈழம் என்னும் விடுதலைப்புலிகளின் நோக்கம் இந்திய இறையான்மைக்கும் தேச ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே இது சட்ட விரோத செயல்பாடுகளின் கீழ் வருகிறது. விடுதலைப்புலிகளின் இந்திய எதிர்ப்பு மனநிலை இந்திய மக்களின் பாதுகாப்புக்கு எதிராக தொடர்கிறது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், டெசோ மாநாடு தமிழ் ஈழ ஆதரவு மாநாடு. நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு இப்போது அடிப்படை வசதிகள், கல்வி, மருத்துவம் தேவை. தமிழ் ஈழம், நிரந்தர தீர்வாக அமையாது என்று கூறியுள்ளார்.
 
இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் நேற்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, விடுதலைப்புலிகள் தடை தொடர்பாக மத்திய உள்துறை பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து மத்திய மந்திரி ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் விளக்கி கூறியதாக சொல்லப்படுகிறது.
 
மத்திய மந்திரி ப.சிதம்பரம், துணை ஜனாதிதி தேர்தல் குறித்தும், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படும் போது தி.மு.க. சார்பில் புதிய மந்திரிகள் இடம் பெறுவது குறித்தும் பேசினார். டெசோ மாநாடு பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க வில்லை என்று தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே, விழுப்புரத்தில் நடைபெறுவதாக இருந்த டெசோ மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. எனவே, இதில் மாற்றம் இல்லை என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். விடுதலைப்புலிகள் ஆதரவு, தனி ஈழம் ஆதரவு ஆகியவை இந்திய இறை யாண்மைக்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளதால் தமிழக அரசு டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே, டெசோ மாநாடு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

துருக்கி அருகே இருவேறு படகு விபத்துக்களில் 33 அகதிகள் பலி

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif