இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி தர எதிர்ப்பு: பெரியார் திராவிட கழகம் || sri lanka army officer training oppose periyar dravidar kazhagam
Logo
சென்னை 05-10-2015 (திங்கட்கிழமை)
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி தர எதிர்ப்பு: பெரியார் திராவிட கழகம்
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூரில் பயிற்சி தர எதிர்ப்பு: பெரியார் திராவிட கழகம்
சென்னை, ஜூலை 15-

தமிழ்நாட்டில் நடைபெறும் ராணுவ முகாமிற்கு இலங்கை அதிகாரிகளை அனுமதித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான பயிற்சி முகாம் குன்னூரில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை, வங்கதேசம், சீனாவைச் சேர்ந்த் 40 ராணுவ அதிகாரிகள் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரிக்கு வந்துள்ளனர்.

இதில் இலங்கை சார்பில் 4 அதிகாரிகள் வந்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தாம்பரம் முகாமில் இலங்கை விமானப்படை வீரர்கள், பயிற்சி பெற்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த வீரர்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில் இலங்கை அதிகாரிகள் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்திருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கிருந்து இலங்கை அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளன.

இலங்கை அதிகாரிகளை வெளியேற்றாவிட்டால் வெலிங்டன் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் பெரியார் தி.க. எச்சரித்துள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

சென்னை மாநகராட்சியின் மேயர் சைதை துரைசாமியின் தந்தை க.சாமியப்ப கவுண்டர் காலமானார்

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் தந்தை க.சாமியப்ப கவுண்டர் நேற்று மாலை 5 மணிக்கு ....»

VanniarMatrimony_300x100px_2.gif