நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: இந்தியர்கள் உள்பட 36 பக்தர்கள் பலி || 36 pilgrims mostly Indians killed in bus accident in Nepal
Logo
சென்னை 23-05-2015 (சனிக்கிழமை)
  • பாகிஸ்தானிடமிருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவிப்பு
  • ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வதில் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?: பா.ஜ.க. மீது காங்கிரஸ் பாய்ச்சல்
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: இந்தியர்கள் உள்பட 36 பக்தர்கள் பலி
நேபாளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: இந்தியர்கள் உள்பட 36 பக்தர்கள் பலி
காத்மாண்டு, ஜூலை.15-
 
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 80 பக்தர்கள் நேபாளத்தின் நாவல்பராசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். காத்மாண்டு நகரில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டக் கால்வாய் பகுதியில் வந்தபோது, ஓவர்லோடு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென கால்வாயில் கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலான பக்தர்கள் இந்தியர்கள். சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேபாள ராணுவம் மற்றும் உள்ளூர் பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவினர்.
 
கால்வாயில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து 25 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.
 
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக பயணிகளை ஏற்றி வந்ததே விபத்துக்கு முக்கிய காரணம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

பாகிஸ்தானிடமிருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம்: ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவிப்பு

பாகிஸ்தானிடம் இருந்து 12 மாதங்களுக்குள் முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ....»

160x600.gif