கந்து வட்டி கும்பல் மிரட்டலால் ஐ.சி.எப். ஊழியர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது || Usury by gang threats icf employees suicide
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
கந்து வட்டி கும்பல் மிரட்டலால் ஐ.சி.எப். ஊழியர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
கந்து வட்டி கும்பல் மிரட்டலால் ஐ.சி.எப். ஊழியர் தற்கொலை:
 உருக்கமான கடிதம் சிக்கியது
மாதவரம், ஜுலை 15-

கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 37-வது தெருவைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 44). ஐ.சி.எப். நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மனைவி ரேவதி. குழந்தைகள்  இல்லை. கணவன்-மனைவி வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை சத்தியமூர்த்தி வீட்டில் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்டார். கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். நேற்று   சத்தியமூர்த்தி தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எனது சாவுக்கு மணிவண்ணன் என்கிற மாது, மனோகரன் என்கிற தாஸ் ஆகியோர் தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மணிவண்ணன் வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர். மனோகரன்  கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் கந்து வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள். அவர்களிடம் சத்தியமூர்த்தி கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி கட்டிய நிலையில் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

நள்ளிரவில் தூங்க விடாமல் மிரட்டியதாக வேதனையில் சத்தியமூர்த்தி தற்கொலை செய்து கொண்டு உள்ளார். மணிவண்ணன் செய்த தொல்லைகள் குறித்து  கடிதத்தில் அவர் விரிவாக குறிப்பிட்டு உள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் மணிவண்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif