Logo
சென்னை 24-04-2014 (வியாழக்கிழமை)
இங்கிலாந்தில் 2 சிறுமிகளை கற்பழித்த 12 வயது சிறுவனுக்கு ஜெயில்
லண்டன்,ஜூலை.15-

இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் பால்டன் எனும் ஊர் உள்ளது. அங்குள்ள மைதானத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுவர், சிறுமிகள் ஒளிந்து விளையாடினார்கள்.

அந்த விளையாட்டின்போது 12 வயது சிறுவன் ஒருவன் 10 வயது சிறுமியை மறைவிடத்தில் வைத்து கற்பழித்தார். அந்த சிறுமியை அவன் அன்று பல தடவை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிகிறது.

அதுபோல மறுநாள் அதே மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியையும் அவன் மிரட்டி மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று கற்பழித்தான்.

இதுபற்றி அந்த 2 சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். சிறுவனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் அப்போது சிறுவன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தான். என்றாலும் சிறுவன் கற்பழிப்பில் ஈடுப்பட்டான் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த சிறுவனுக்கு நீதிபதி 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். இங்கிலாந்தில் மிக குறைந்த வயதில் கடும் காவல் தண்டனையை இந்த சிறுவன் பெற்றுள்ளான் என்று தெரியவந்துள்ளது.

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

ஓரின சேர்க்கை இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்

மெல்போர்ன், ஏப். 24–ஐதராபாத்தை சேர்ந்த 25 வயது மாணவர் ஒருவர் வணிக நிர்வாகவியல் மேல் பட்டப்படிப்பிற்காக ....»