மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாட இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் விருப்பம் || England Cricketer Peterson want to return in ODIs
Logo
சென்னை 31-01-2015 (சனிக்கிழமை)
மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாட இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் விருப்பம்
மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாட இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் விருப்பம்
லண்டன், ஜுலை.15-
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான கெவின் பீட்டர்சன் கடந்த மே மாதத்தின் இறுதியில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
 
இங்கிலாந்து அணியின் வீரர்கள் ஒப்பந்தப்படி ஒரு வீரர் ஒருநாள் போட்டியில் இருந்து விலகினால், 20 ஓவர் போட்டியிலும் பங்கேற்க முடியாது. இதனால் பீட்டர்சன் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒன்றாக ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
இந்நிநிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் தனக்கு இடம் கிடைத்தால் விளையாட தயாராக இருக்கிறேன் என்று பீட்டர்சன் கூறினார். இதுதொடர்பாக அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் தேர்வாளர்களை சந்தித்தும் பேசினார்.
 
20 ஓவர் போட்டியில் மட்டும் பீட்டர்சன் மீண்டும் விளையாட அனுமதிக்க இங்கிலாந்து வீரர்கள் ஒப்பந்த விதியின் படி வழிஎதுவுமில்லை. இதனால் அவர் 20 ஓவர் போட்டியுடன், ஒருநாள் போட்டியிலும் விளையாட சம்மதம் என்று தனது முடிவில் திடீர் மனமாற்றம் கண்டுள்ளார். பீட்டர்சன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
அடுத்த 3 அல்லது 4 வருடங்களுக்கு 20 ஓவர், ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 வகையான போட்டிகளிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாட நான் விரும்புகிறேன். இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். அவர்கள் எனது வேண்டுகோளை ஏற்று மீண்டும் நான் எல்லா வகையான ஆட்டத்தில் விளையாட அனுமதி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
 
அதேநேரத்தில் எல்லா போட்டிகளிலும் விளையாட என்னை நிர்பந்திக்கக்கூடாது. எல்லா நாட்களிலும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது. அனைத்து நாட்களிலும் பயிற்சியில் ஈடுபட முடியாது. வெற்றிகரமாக செயல்பட ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எதை செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். போட்டி அட்டவணை எனக்கு நெருக்கடி அளிக்காத வகையில் பார்த்து கொண்டால் அடுத்த 4 ஆண்டுகள் எல்லா வகையான ஆட்டத்திலும் விளையாட நான் தயார். தற்போதைய போட்டி அட்டவணையை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட இங்கிலாந்து உத்தேச அணி இந்த வார இறுதியில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதில் கெவின் பீட்டர்சன் பெயர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மதச்சார்பின்மையை முன்வைத்து ஓட்டு வங்கி அரசியலை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்: ராம கோபாலன்

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசியல் சாசன சிற்பி, அம்பேத்கரிடம் ....»