சென்னையில் தொடரும் நகை பறிப்பு: டெல்லி கொள்ளை கும்பல் கைவரிசை || chennai continue gold theft delhi gang
Logo
சென்னை 02-03-2015 (திங்கட்கிழமை)
சென்னையில் தொடரும் நகை பறிப்பு: டெல்லி கொள்ளை கும்பல் கைவரிசை
சென்னையில் தொடரும் நகை பறிப்பு: டெல்லி கொள்ளை கும்பல் கைவரிசை
சென்னை, ஜூலை.14-

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடை பெற்றுவந்தன. தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு வலம் வந்த 2 கொள்ளையர்கள் முகவரி கேட்பது போல நடித்தும், மோதுவது போல சென்றும் பெண்களை நிலைகுலைய செய்து செயினை பறித்துச் சென்றனர்.

ஒருசில வீரப் பெண்கள் கொள்ளையர்களுடன் போராடி பாதி செயினை தக்க வைத்துக் கொண்டனர். எழும்பூர், திருவல்லிக் கேணி, பூக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்து செயல்பட்டனர்.

கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன் ஆகியோரது உத்தரவின்பேரில் அனைத்து இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களும் களத்தில் இறக்கப்பட்டனர். இரவு நேர ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் பாரிமுனை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர் களை பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க இந்த மோட்டார் சைக்கிள்தான் போலீசுக்கு துருப்புச் சீட்டாக அமைந்தது. மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து, முதலில் முகவரியை கண்டுபிடித்தனர். கொள்ளையர்கள் போட்டு விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்ததை கண்டு பிடித்தனர். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் வெளிமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு மோட்டார் சைக்கிளை விற்று விட்டதாக கூறினார்.

இதற்கிடையே அந்த வாலிபர் யார் என்பதையும் போலீசார் கண்டு பிடித்தனர். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையே டெல்லியை சேர்ந்த ஆபிதா, இம்தியாஸ் ஆகிய இருவரும் யானைக்கவுனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது போலீசில் சிக்கினர். இவர்கள் இருவரும் அக்காள்-தம்பி என்று தெரிய வந்தது.

விசாரணையில் இவர்கள் பாரிமுனை கோவிந்தப்பநாயக்கன் தெருவில் செயினை பறிக்க முயன்றவர்கள் என்பதும், மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்த போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

டெல்லியில் இருந்து தனித்தனியாக கொள்ளைக் கும்பல்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து இம்தியாசும், ஆபிதாவும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளனர். கொள்ளையடித்த நகைகளுடன் கொள்ளைக் கும்பல் அடுத்த விமானத்தில் டெல்லிக்கு தப்பிச் சென்றுள் ளது. சென்னையில் கொள்ளையடிப்பதற்காக பழைய மோட்டார் சைக்கிள்களை டெல்லி கொள்ளை கும்பல் விலைக்கு வாங்கி அதில் ஹெல்மெட் அணிந்த படி சுற்றி வந்துள்ளனர். தி.நகர், அண்ணாநகர், எழும்பூர், திருவல்லிக்கேணி, பூக்கடை, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி கொள்ளை கும்பலை பிடிக்க உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த வாரம் டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு கொள்ளை கும்பல் பற்றி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ள அவர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் முகாமிட்டுள்ள போலீசார் கொள்ளையர்களை கைது செய்து சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் செயின் பறிப்பு சம்பவங்களில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சென்னையில் கைதான ஆபிதாவும், இம்தியாசும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

இரட்டை ரெயில் பாதை சிக்னல் பணிகள்: வைகை, திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை தாமதமாக புறப்படும்

திண்டிவனம்- தொழுப்பேடு இடையே இரட்டை ரெயில் பாதைகளை இணைப்பதற்காக செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே சிக்னல்கள் அமைக்கும் ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif