கரூர் அருகே ஏழை மாணவன் என்ஜினீயரிங் படிக்க நிதி உதவி: காமராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார் || finance aid to students in karur kamaraj mla distribute
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை மீண்டும் தோல்வி
  • விசாகப்பட்டினம்: சர்வதேச நாடுகளின் கடற்படை ஆய்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி உரை
கரூர் அருகே ஏழை மாணவன் என்ஜினீயரிங் படிக்க நிதி உதவி: காமராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்
கரூர் அருகே ஏழை மாணவன் என்ஜினீயரிங் படிக்க நிதி உதவி:
காமராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்
கரூர்,ஜூலை.14-
 
கரூரை அடுத்த மலைக்கோவிலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயா. இவர்கள் கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களது மகன் கார்த்திக். கார்த்திக் மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இவர் பிளஸ்-2 தேர்வில் 1,105 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பெற்றார்.
 
இந்த நிலையில் மாணவன் என்ஜினீயரிங் படிக்க உள்ளார். ஆனால் ஏழை குடும்பம் என்பதால் மாணவனுக்கு தேவையான நிதி இல்லை. இதை அறிந்த காமராஜ் எம்.எல்.ஏ. மாணவனின் உயர் கல்வி படிப்பு செலவிற்கு ரூ.10 ஆயிரம் நிதியை தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கினார்.
 
இதை பெற்றுக்கொண்ட மாணவன் மற்றும் அவரது பெற்றோர், காமராஜ் எம்.எல்.ஏ.விற்கு நன்றி தெரிவித்தனர்.
 
இதே போன்று அ.தி.மு.க. கட்சியின் மூத்த உறுப்பினர் 6-ரோட்டை சேர்ந்த முத்தம்மாள் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், தாந்தோணி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கரூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif