வேலூர் திருவண்ணாமலையில் மழை || rain in vellore and tiruvannamalai district
Logo
சென்னை 24-07-2014 (வியாழக்கிழமை)
  • காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல்: ஒருவர் பலி
  • நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • பூடான் - சீனா இடையேயான எல்லை பிரச்சனை: இன்று பேச்சுவார்த்தை
  • ராகுல் 25-ம் தேதி அமேதிக்கு பயணம்
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு
  • இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
வேலூர்-திருவண்ணாமலையில் மழை
வேலூர்-திருவண்ணாமலையில் மழை
வேலூர்,ஜூலை.14-
 
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இடி- மின்னலுடன் இரவு முழுவதும் மழை பெய்தது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 80 மி.மீட்டர் கொட்டியது. நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலையில் மேகங்கள் திரண்டு வந்து இடி-மின்னனுடன் மழை பெய்தது.
 
மேலாலத்தூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் ஓரளவு நல்ல மழை பெய்தது. வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணியில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது.3 நாட்கள் பெய்த மழையால் வேலூர் ஜில்லென ஆனது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கண்ணமங்கலம், ஆரணி, போளூர் பகுதியில் மழை பெய்தது. திருவண்ணாமலையில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - வேலூர்