Logo
சென்னை 24-05-2013 (வெள்ளிக்கிழமை)
  • காஞ்சிபுரம் அருகே தனியார் பார்சல் லாரியில் தீ: சென்னை - பெங்களூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய மந்திரி சபை ஒப்புதல்
  • மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று மறியல் போராட்டம்
  • ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங் தள்ளிவைப்பு
  • 17 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 19 அடியாக குறைந்தது
  • சி.பா. ஆதித்தனாரின் 32-வது நினைவு நாள்: சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
  • இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 26 தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
  • மதுரையில் அரசு அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: பெண் புகார்
திருமலையில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடித்து தந்தால் ரூ.1 லட்சம் பரிசு: தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை, ஜூலை 13-
 
சென்னை அடையாறைச் சேர்ந்த ராஜா, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கடந்த 7-ம் தேதி இரவு திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கு தங்குவதற்கு விடுதியில் இடம் கிடைக்காதால் மண்டபத்தில் அனைவரும் படுத்து தூங்கினர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அவர்களின் 8 மாத ஆண் குழந்தை பிரதியூத்தைக் காணவில்லை. யாரோ குழந்தையை கடத்தி சென்றுவிட்டனர்.
 
குழந்தையைக் காணாமல் பதறித் துடித்த பெற்றோர், இதுபற்றி தேவஸ்தானம் மற்றும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வயர்லெஸ் மூலம் அனைத்து பகுதிக்கும் தகவல் தெரிவித்து குழந்தையை தேடி வருகின்றனர். ஆனால் 5 நாட்களாகியும் குழந்தை கிடைக்கவில்லை.
 
குழந்தையை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் தேவஸ்தான அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த தேவஸ்தான அதிகாரிகள், குழந்தையை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். அத்துடன் குழந்தையை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை தருவதாக அறிவித்தனர்.
 
மேலும் குழந்தையின் பெற்றோர் திருமலை முழுவதும் சென்று குழந்தையை தேடிப் பார்க்க தனி காரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

10 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை காப்பாற்ற உதவிய அமெரிக்கருக்கு ஆயுள் முழுவதும் இலவச 'பர்கர்'

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம், கிளீவ்லேண்ட் பகுதியில் 10 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண்களை போலீசார் கடந்த ....»

Recommendations
Recent Activity