பசுமை வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்: வாலாஜாபாத் எம்.எல்.ஏ. வேண்டுகோள் || pasumai veedu work walajapet ganesan mla
Logo
சென்னை 01-03-2015 (ஞாயிற்றுக்கிழமை)
பசுமை வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்: வாலாஜாபாத் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
பசுமை வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்கவேண்டும்:
 வாலாஜாபாத் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
காஞ்சீபுரம்,ஜூலை. 13-

வாலாஜாபாத் ஒன்றியக் குழுக்கூட்டம் தலைவர் தென்னேரி வரதராஜுலு தலைமையில் நடைபெற்றது. வாலாஜாபாத் கணேசன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சிகளில் நடைபெறும் அரசின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கிராமப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சித் தலைவர்களிடம் கேட்டறிய வேண்டும். பசுமை வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கணேசன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், நடராஜன் (கிராம ஊராட்சிகள்) துணைத் தலைவர் ராஜகுளம் முனுசாமி, மாவட்டக் கவுன்சிலர்கள் படுநெல்லி தயாளன், உள்ளாவுர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - காஞ்சிபுரம்

section1

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 1 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த பெண் கைது

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 1 கிலோ 200 கிராம் தங்க நகைகளை கடத்தி ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif