தேசிய ஜூனியர் நீச்சல்: தமிழக அணிக்கு ஒரே நாளில் 12 பதக்கம் || national junior swimming tamilnadu team medal
Logo
சென்னை 28-03-2015 (சனிக்கிழமை)
தேசிய ஜூனியர் நீச்சல்: தமிழக அணிக்கு ஒரே நாளில் 12 பதக்கம்
தேசிய ஜூனியர் நீச்சல்: தமிழக அணிக்கு ஒரே நாளில் 12 பதக்கம்
சென்னை, ஜூலை.12-

தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 39-வது தேசிய ஜூனியர் நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 15-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் இந்திய நீச்சல் சம்மேளன பொதுச்செயலாளர் கமலேஷ் நானாவதி தமிழ்நாடு நீச்சல் சங்க தலைவர் ஜே.எஸ்.சோப்ரா, செயலாளர் நைனார் ஆசாரி, துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேற்றைய தொடக்க நாளில் தமிழக அணிக்கு 3 தங்கம் உள்பட 12 பதக்கம் கிடைத்தது. 200 மீட்டர் பிரீஸ்டைலில் அனுஷா மேத்தாவும் (குரூப் 1), 100 மீட்டர் பிரஸ்டிரோக்கில் புதிய சாதனையுடன் ஜெயவீனாவும் (குரூப்2), 100 மீட்டர் பேக் ஸ்டிரோக்கில் (குரூப் 2) முகுந்தனும் தங்கம் வென்றனர்.

100 மீட்டர் பேக்ஸ்டிரோக் கில் ஷெர்லின் மேக்னா (குரூப்2) வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் (குரூப்1) மற்றும் 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் (குரூப் 2) நீச்சலில் தமிழக அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

200 மீட்டர் பிரீஸ்டைலில் ஆதர்ஷ் நாராயனும் (குரூப்1, 200 மீட்டர் பிரீஸ்டைலில் ஸ்ரீராமும் (குரூப்2), 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் (குரூப்1) சேதுமாணிக்கவேலுவும், 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பெண்கள் பிரிவில் சுஷ்மிதாவும் (குரூப்1) வெண்கல பதக்கம் பெற்றனர்.

4 x 100 மீட்டர் பிரீஸ் டைல் தொடர் நீச்சல் (குரூப்1) பிரிவிலும், குரூப் 2 பிரிவிலும் தமிழக அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்