புதுச்சேரி அரசு வக்கீல் நியமனத்தை எதிர்த்து வழக்கு || puducherry government lawyer appointment against case
Logo
சென்னை 05-09-2015 (சனிக்கிழமை)
  • சீனாவில் 1.70 லட்சம் ராணுவ உயரதிகாரிகளுக்கு கல்தா
  • டெல்லி-பரிதாபாத் மெட்ரோ ரெயில்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார் - 2 லட்சம் பயணிகள் பயன் அடைவார்கள்
  • அம்மா உப்பு; இந்தியா முழுவதும் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்
புதுச்சேரி அரசு வக்கீல் நியமனத்தை எதிர்த்து வழக்கு
புதுச்சேரி அரசு வக்கீல் நியமனத்தை எதிர்த்து வழக்கு
சென்னை, ஜூலை. 12-

சென்னையை சேர்ந்த வக்கீல்கள் சத்தியசந்திரன், ஞானசேகரன் ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசுக்கான மூத்த அரசு வக்கீல் என்ற பெயரில் வக்கீல் டி.முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசு கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்தது. இதுபோன்ற பதவி கிடையாது. அந்த பதவிக்கு சட்டப்படி நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது அந்த அரசாணை மூலம் தெரிகிறது.

இவரது நியமனம் சட்டத்துக்கு மாறானது. புதுச்சேரி அரசு வக்கீலாக இவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஏற்கனவே ஐகோர்ட்டில் சரவணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது எதிர்காலத்தில் அரசு வக்கீல் நியமனமானது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 24(1)ன்படி நடைபெறும் என்று புதுச்சேரி அரசு உத்தரவாதம் அளித்து இருந்தது.

ஆனால் இதற்கு மாறாக டி.முருகேசன் புதுச்சேரி அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் எலிபி தர்மா ராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்க மத்திய சட்ட மற்றும் நிதித்துறை அமைச்சகம், புதுச்சேரி அரசு தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், வக்கீல் டி.முருகேசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்த கணவர்

ராயபுரம், செப்.5–புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டைச் சேர்ந்தவர் மதுரை முத்து (வயது 48). இவரது மனைவி மல்லிகா ....»