பெரம்பூர் தாலுகா அலுவலகத்தில் பெண் தாசில்தார் முன்னிலையில் புரோக்கர்கள் பொதுமக்கள் மோதல் || perambur taluk office lady tashildar public brokers clash
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
பெரம்பூர் தாலுகா அலுவலகத்தில் பெண் தாசில்தார் முன்னிலையில் புரோக்கர்கள்-பொதுமக்கள் மோதல்
பெரம்பூர் தாலுகா அலுவலகத்தில் பெண் தாசில்தார் முன்னிலையில் புரோக்கர்கள்-பொதுமக்கள் மோதல்
பெரம்பூர், ஜூலை. 12-

பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள தாசில்தார் அலுவலகத்தில் புரோக்கர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் சாதி, வருவாய் போன்ற சான்றிதழ்களை வாங்கித்தர அதிக பணம் கேட்கிறார்கள். சாதி சான்றிதழுக்கு ரூ. 500 முதல் ரூ. 1500 வரை வசூலிக்கிறார்கள். அதிக பணம் கொடுத்தால் உடனடியாக சான்றிதழை வாங்கித் தந்து விடுகிறார்கள்.

தாசில்தார் அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க பொதுமக்கள் முறைப்படி விண்ணப்பம் கொடுத்தால் அங்குள்ள ஊழியர்கள் மாத கணக்கில் இழுத்தடிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி புரோக்கர்களை நாடுகிறார்கள். இதனால் இந்த அலுவலகத்தில் புரோக்கர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று தாசில்தார் பிரேமா முன்னிலையில் புரோக்கர்கள் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் சிலர், புரோக்கர்களிடம், அதிக பணம் வாங்கிவிட்டு ஏன் உடனே சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் புரோக்கர்கள் ஒன்றாகச் சேர்ந்து பொதுமக்களை அடிக்கப் பாய்ந்தனர். உடனே பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்ததும் புரோக்கர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சாதி சான்றிதழ் வாங்க வந்த ஓட்டேரியைச் சேர்ந்த ரவி கூறும்போது, இங்குள்ள ஊழியர்கள் சாதி சான்றிதழை வழங்க மிகவும் காலதாமதம் செய்கிறார்கள். இதனால்தான் நாங்கள் புரோக்கரை நாடவேண்டி உள்ளது. அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மறுநாளே சான்றிதழ் கிடைத்து விடுகிறது. தற்போது புரோக்கர்களிடம் அதிகம் பேர் சான்றிதழ் வாங்க பணம் கொடுத்தால் அவர்களால் உடனே வாங்கித்தர முடியவில்லை. இதனால்தான் அவர்களிடம் சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் தகராறு செய்தனர் என்றார்.

பெரம்பூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி கூறும்போது, நான் சாதி சான்றிதழ் வாங்க புரோக்கரிடம் ரூ. 1,500 கொடுத்தேன். ஆனால் அவர் குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் தரவில்லை. இதனால்தான் அவரிடம் சான்றிதழ் கேட்டு வாக்குவாதம் செய்தேன் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

விண்கல் விழுந்து பலியான பஸ் டிரைவர் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா

சென்னை, பிப். 7–முதல் – அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–வேலூர் மாவட்டம், கே.பந்தாரப்பள்ளி ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif