சாப்ட்வியூ நிறுவன அதிபர் ஆண்டோ பீட்டர் திடீர் மரணம் || Softview Computers antopeter dead
Logo
சென்னை 18-04-2015 (சனிக்கிழமை)
  • நிலம் கையகப்படுத்தும் மசோதா: விவசாய சங்கத்தினருடன் இன்று ராகுல் ஆலோசனை
  • 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத்தலைவர் இன்று ஆய்வு
  • நாடு திரும்பினார் பிரதமர் மோடி
  • கோடிக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
  • கர்நாடகாவில் முழுஅடைப்பு: பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்
சாப்ட்வியூ நிறுவன அதிபர் ஆண்டோ பீட்டர் திடீர் மரணம்
சாப்ட்வியூ நிறுவன அதிபர்
 ஆண்டோ பீட்டர் திடீர் மரணம்
சென்னை, ஜூலை.12-

தமிழ் கணினித் துறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க சேவைகள் செய்திருப்பவர் ஆண்டோபீட்டர். கணித் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த அவர் சாப்ட்வியூ என்ற நிறுவனத்தை தொடங்கி ஏராளமானவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சி அளித்து வந்தார்.

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ரமணி நகரில் வசித்து வந்த அவருக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி.

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது தமிழ் கணினி உலக நிபுணர்களை இவர்தான் ஒருங்கிணைத்தார். கணினித் தமிழ் மேம்பாட்டுக்கு இவர் செய்துள்ள சேவை அளவிடற்கரியது. அவரது மறைவு கணினி தமிழ் ஆய்வாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டோ பீட்டர் உடல் அடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கொளத்தூரில் நடைபெற உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கடல் மற்றும் வான் பகுதிகளில் ஜப்பானின் ஆய்வு நடவடிக்கையால் பாதுகாப்பு நெருக்கடி: சீனா புகார்

ஜப்பானின் வடக்கு வான் பகுதியில் ரஷிய குண்டுவீச்சு விமானங்களும், தெற்கு வான் பகுதியில் சீன ....»