6 எலும்புக்கூடுகளில் நடிகை லைலாகான் உடல் எது?: டி.என்.ஏ. சோதனை நடத்தப்படுகிறது || six skeletons actress laila khan body dna test
Logo
சென்னை 22-09-2014 (திங்கட்கிழமை)
6 எலும்புக்கூடுகளில் நடிகை லைலாகான் உடல் எது?: டி.என்.ஏ. சோதனை நடத்தப்படுகிறது
6 எலும்புக்கூடுகளில் நடிகை லைலாகான் உடல் எது?: டி.என்.ஏ. சோதனை நடத்தப்படுகிறது
மும்பை, ஜுலை. 12-

பிரபல இந்தி நடிகை லைலாகான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென குடும்பத்தினருடன் மாயமாகி விட்டார். நிழல் உலக தாதா இப்ராகிம் தாவூத் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்ததால் அவர் துபாய் சென்று விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீரில் சமீபத்தில் லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாத இயக்க ஆதரவாளன் என்று சந்தேகிக்கப்படும் பர்வேஸ் தக் பிடிபட்டான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது நடிகை லைலாகான் உள்பட அவர் குடும்பத்தினர் 6 பேரை சுட்டுக்கொலை செய்து விட்டதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தான்.

இதையடுத்து அவனை போலீசார் மும்பைக்கு அழைத்து வந்து கூடுதல் விசாரணை நடத்தினார்கள். அப்போது லைலாகான் மற்றும் 5 பேரை கொலை செய்த பிறகு நாசிக் அருகில் உள்ள இல்காட்பூரியில் இருக்கும் ஒரு பண்ணைத் தோட்டத்தில் புதைத்து விட்டதாக தக் கூறினான்.

தக் கூறிய பண்ணை வீட்டில் போலீசார் தோண்டிப் பார்த்தனர். அப்போது ஒன்றன் பின் ஒன்றாக 6 பேரின் எலும்புக்கூடுகள் கிடைத்தன. இந்த 6 எலும்புக்கூடுகளில் ஒன்று ஆண் உடல். மற்ற 5 எலும்புக்கூடுகளும் பெண் உடல்கள் என்று முதல் கட்ட விசாரணையில் உறுதி படுத்தப்பட்டது. இதன் மூலம் அந்த பண்ணை தோட்டத்தில் புதைக்கப்பட்டது லைலாகான் மற்றும் அவருடன் மாயமான 5 பேர்தான் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே 5 பெண் எலும்புக்கூடுகளில் எது லைலாகான் உடல்? எது அவரது தாய் செலினா உடல்? என்று அடையாளம் காண முடியவில்லை. எனவே லைலாகான் உடலை  கண்டுபிடிக்க டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த சோதனை முடிந்த பிறகே எந்தெந்த எலும்புக்கூடுகள் யாருடையது என்பது உறுதியாக தெரிய வரும். இதற்காக போலீசார் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே எலும்புக்கூடுகள் நொறுங்கியுள்ள விதத்தை வைத்து 6 பேரும் கடுமையாக அடித்து கொடூரமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடமாட்டம்: பா.ஜ.க. கடத்தலா? டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் பா.ஜ.க., பா.ஜ.கவுக்கு தாவும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலை ....»