பாக்.போலீஸ் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை || terrorist attack on police quatres
Logo
சென்னை 31-01-2015 (சனிக்கிழமை)
பாக்.போலீஸ் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை
பாக்.போலீஸ் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை
லாகூர், ஜூலை.12-
 
பாகிஸ்தானின் லாகூர் நகரில் வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பயிற்சிக்காக வந்து இருந்தனர். அவர்கள் அங்குள்ள வாடகை கட்டிடத்தில் தங்கி தினமும் பயிற்சிக்கு சென்று வந்தனர்.
 
இன்று அதிகாலை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் ஒரு கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். போலீஸ்காரர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 9 போலீஸ்காரர்கள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.மேலும் படுகாயம் அடைந்தனர்.
 
இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். முதலில் கட்டிடத்தின் முன் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் 3 தளங்களில் சென்று ஆங்காங்கே தூங்கிக் கொண்ருந்தவர்களை சரமாரியாக சுட்டனர்.
 
உடனே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிரவாதிகள் வெடி குண்டுகளை வீசியதால் அங்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்