துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு || vice president election ansari support united Janata Dal
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்துகிறது உக்ரைன்
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு
துணை ஜனாதிபதி தேர்தல்:
 அன்சாரியை தேர்வு செய்ய ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு
புதுடெல்லி, ஜூலை. 12-

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு எதிர்க்கட்சிகளில் சில ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பிரணாப் முகர்ஜிக்கு சுமார் 70 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவியையும் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக நாளை மறுநாள் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் தற்போதைய துணை ஜனாதிபதி அன்சாரியை மீண்டு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியை துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறது.

எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்துவது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆலோசனை கூட நடைபெறவில்லை.

பா.ஜ.க. மூத்த தலைவர் ஐஸ்வந்த்சிங் அல்லது அகாலி தளம் தலைவரும் பஞ்சாப் முதல்-மந்திரியுமான பாதல் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ஒற்றுமையுடன் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் அன்சாரியை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நீதிஷ்குமாருக்கு மிகவும் நெருக்கமான ஒரு தலைவர் கூறுகையில், துணை ஜனாதிபதி பதவிக்கு அன்சாரி பொருத்தமானவர் என்று நீதிஷ்குமார் கருதுகிறார். எனவே அன்சாரி நிறுத்தப்பட்டால் அவரை ஐக்கிய ஜனதா தளம் ஆதரிக்கும் என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் எடுத்துள்ள இந்த முடிவு பா.ஜ.க தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் பொறுமையாக நடந்து கொள்ள பா.ஜ.க தீர்மானித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை தொடர்ந்து முலாயம்சிங், மாயாவதி ஆகியோரும் அன்சாரியை ஆதரிக்கும் பட்சத்தில் அவரும் மிக எளிதாக துணை ஜனாதிபதி ஆகிவிடுவார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடும் பாராளுமன்ற கூட்டத்தொடர்

பாராளுமன்ற கூட்டத்தொடர், ஏதேனும் ஒரு முக்கிய பிரச்சினையில் சிக்கி எந்த ஆக்கப்பூர்வமான பலனும் இல்லாமல் முடிவுக்கு ....»