கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் || chicken kulambu poison husband killed wife attack
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்
கோழிக்கறியில் விஷம் கலந்தார்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண்
கொடுமுடி,ஜூலை.12-

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஏமகண்டனூரை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது35) இவரது மனைவி பெயர் வனிதா (27). இவர்களுக்கு ஒருவயதில் ஒருபெண் குழந்தை உள்ளது. கொடுமுடியில் உள்ள குடிநீர் வடிகால்வாரியத்தில் வேலை பார்த்து வந்த சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த மார்ச் 16-ந் தேதி சசிகுமார் திடீரென இறந்துவிட்டார். அவரது சாவு இயற்கையான சாவு என்று முதலில்கூறப்பட்டது. ஆனால் அவரது தாய் பாப்பாத்தி, என்மகன் இயற்கையாக சாகவில்லை. அவன் சாவில் மர்மம் உள்ளது. என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். கொடுமுடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே சசிகுமாரின் மனைவி வனிதா விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென மாயமானாள். அவளுக்கும் அதேபகுதியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில்குமார்(28) என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்துவந்தது. அவருடன் வனிதா திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் வனிதா கணவர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது. உறுதியானது.

இதையொட்டி வனிதாவையும் அவரது கள்ளக் காதலன் செந்தில்குமாரையும் பிடிக்க கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி தலைமையில் தனிபோலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பலஇடங்களில் கள்ளக் காதலர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இதற்கிடையே மாயமான கள்ளக்காதல் ஜோடி ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கி புதுக்குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது. வனிதா ராமேஸ்வரம் சென்றதும் தனது செல்போனை ஆப் செய்தாள். பிறகு சாமர்த்தியமாக செல்போனில் உள்ள சிம்கார்டை கழட்டிவீசி விட்டார். பிறகு புதிய சிம் கார்டு போட்டு கள்ளக்காதலனுடன் ஒரேயொரு தடவை பேசி உள்ளாள்.

சிம்கார்டில் உள்ள ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் தனிப்படை போலீசார் இதை மோப்பம்பிடித்தனர். இந்த ஐ.எம்.ஈ. நம்பர் மூலம் எந்த ஊரிலிருந்து பேசுகிறார்கள் என்று கண்டுபிடித்து விடலாம். அந்த வகையில் கொடுமுடி போலீசார் ராமேஸ்வரம் போலீசில் தகவல் கொடுக்க ராமேஸ்வரம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

போலீசார் தங்களை தேடி அருகே வந்து விட்டனர் இனி மாட்டிக் கொள்வோம் என யூகித்துக் கொண்ட கள்ளக் காதலர்கள் போலீசாரிடம் சிக்கமால் பஸ் ஏறி கொடுமுடி வந்தனர். கொடுமுடி வந்ததும் கிராம நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியம் முன்னிலையில் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

போலீசாரிடம் சசிகுமாரை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வாக்கு மூலம் அளித்தனர். வாக்குமூலத்தில் வனிதா கூறியதாவது:-

என்கணவர் ஒரு குடிகாரர். குடித்துவிட்டு தினமும் என்னிடம் தகராறு செய்வார். அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்னிடம் அன்பு காட்டி பழகினார். இது எங்களுக்குள் கள்ளக்காதலை ஏற்படுத்தியது. இது என் கணவருக்கு தெரியவந்தது. என்னை கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட கள்ளக்காதலனுடன் திட்ட மிட்டேன். சம்பவத்தன்று என் கணவர் குடித்துவிட்டு வந்தார்.

போதையில் இருந்த அவருக்கு கள்ளக்காதலன் யோசனைப்படி கோழிகறியுடன் விஷத்தை கலந்து கொடுத்தேன். சாப்பிட்டதும் அவர் வாந்தி எடுத்தார். உடனே நான் செந்தில் குமாருக்கு போன் செய்து என் கணவர் வாந்தி எடுத்துவிட்டார். பிழைத்து விடுவார் போலிருக்கிறது. உடனே புறப்பட்டு வா என்று கூறினேன்.

சினிமா தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த செந்தில்குமார் உடனே வந்தார். இருவரும்சேர்ந்து சேலையால் கணவரின் கழுத்தை சுற்றி இருக்கினோம். இதில் மூச்சு திணறி இறந்துவிட்டார். வேலை கச்சிதமாக முடிந்ததும் செந்தில்குமார் ஒன்றும் தெரியாததுபோல் சென்றுவிட்டார். நானும் எதுவும் நடக்காதாதுபோல் படுத்துவிட்டேன். கணவர் குடிபோதையில் இறந்ததாக கூறி நம்ப வைத்தேன். அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று எரித்து விட்டார்கள்.

இவ்வாறு வனிதா கூறினாள்.

கைது செய்யப்பட்ட கள்ளக்காதலர்கள் கொடுமுடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதி பாபுலால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்தி ரேட்டு அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - ஈரோடு

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif