பாலின சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை பிங்கி மீது நில மோசடி குற்றச்சாட்டு: அரசு வழங்கிய வீட்டு மனையை விற்றார் || fraud charges on player pinki pramanik
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
பாலின சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை பிங்கி மீது நில மோசடி குற்றச்சாட்டு: அரசு வழங்கிய வீட்டு மனையை விற்றார்
பாலின சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை பிங்கி மீது நில மோசடி குற்றச்சாட்டு: அரசு வழங்கிய வீட்டு மனையை விற்றார்
கொல்கத்தா, ஜூலை.12-
 
மேற்கு வங்காளத்தை சேர்ந்த தடகள வீராங்கனை பிங்கி பிராம்னிக். 2006-ம் ஆண்டு தோகாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவர் தங்கம் வென்றார். தடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி மீது பாலியல் புகார் கூறப்பட்டது. பிங்கி பெண் அல்ல ஆண் என்றும் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்ததாவும், பணத்தை மோசடி செய்ததாகவும் கொல்த்தாவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறினார்.
 
பிங்கி ஆணா? பெண்ணா? என்ற சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் 26 நாட்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையானார்.
 
மருத்துவ பரிசோதனையில் தன்னை மிகவும் சித்ரவதை செய்ததாகவும், தன் மீது பொய்யான கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் பிங்கி குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில் பிங்கி மீது மேலும் ஒரு மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அவர் மீது நில மோசடி குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தடகளத்தில் சிறப்பாக செயல்பட்ட பிங்கிக்கு மேற்கு வங்க மாநில அரசு இலவசமாக வீட்டு மனை வழங்கியது. அரசு வழங்கிய அந்த வீட்டு மனையை பிங்கி விற்றுள்ளார்.
 
இது தொடர்பாக மேற்கு வங்க விளையாட்டுத் துறை மந்திரி மதன் மிஸ்ரா கூறியதாவது:-
 
பிங்கிக்கு அவர் வசிப்பதற்காக வீட்டு மனை வழங்கப்பட்டது. அந்த மனை லாப நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அரசு வழங்கிய அந்த மனையை அவர் லாப நோக்கில் விற்றுள்ளார். இது சட்ட விரோதமானது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
மந்திரியின் இந்த குற்றச்சாட்டை பிங்கி மறுத்துள்ளார். அவர் கூறும் போது நான் வீட்டு மனையை விற்கவில்லை.அதில் வீடு கட்டுவேன் என்றார். பிங்கி முன்னாள் தடகள வீரர் அவ்தார்சிங்கு தனது மனையை விற்றதாக கூறப்படுகிறது. அவர் தற்போது கட்டுமான காண்டிராக்டராக உள்ளார். அவ்தார்சிங் முன்னாள் தடகள வீராங்கனை ஜோகிர்மாயி சிக்தர் கணவர் ஆவார்.
 
முன்னாள் மாக்சிஸ்டு எம்.பி.யான ஜோகிர்பாய் 1998 ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். பிங்கியை சித்ரவதை செய்ததை கண்டித்து போராட்டம் நடத்துபவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

தெற்காசிய விளையாட்டு: கைப்பந்து போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கப்பதக்கம்

12-வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கவுகாத்தி (அசாம்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இரண்டு நகரங்களில் நடந்து ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif