நுங்கம்பாக்கத்தில் 30 மி.மிட்டர் மழை: சென்னையில் இடியுடன் பலத்த மழை || chennai thunder rain
Logo
சென்னை 30-03-2015 (திங்கட்கிழமை)
நுங்கம்பாக்கத்தில் 30 மி.மிட்டர் மழை: சென்னையில் இடியுடன் பலத்த மழை
நுங்கம்பாக்கத்தில் 30 மி.மிட்டர் மழை: சென்னையில் இடியுடன்
பலத்த மழை
சென்னை, ஜூலை. 12-

தென் மேற்கு பருவ மழை தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது என்றாலும், தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 30 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. மீனம்பாக்கத்தில் 24.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வந்த வெப்பம், இந்த மழை காரணமாக ஓரளவு தணிந்தது. பொழுது நன்றாக விடிவதற்குள் மழை நின்று விட்டதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெப்ப சலனத்தால் மழை பெய்தது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் கலவையில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம், ஆர்.கே.நகர் ஆகியவற்றில் 8 செ.மீ. மழையும், சிவகங்கை வட்டம் திருப்பத்தூரில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாலை - இரவு மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை அதிகாலையிலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபோல் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களிலும் மழை பெய்யும். தென் மேற்கு பருவமழை இனி தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மனித முகத்துடன் பிறந்ததால் கசாப்பு கத்திக்கு தப்பிய வெள்ளாட்டுக்குட்டி: 10 மடங்கு விலை தரும் சர்க்கஸ் கம்பெனி

தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயியான பிலாசியஸ் லாவ்ரெண்டிவ் என்பவர் சினையாக ....»