எம்.பி. எம்.எல்.ஏ.வால் என் உயிருக்கு ஆபத்து: விபசார வழக்கில் சிக்கிய நடிகை தாராசவுத்ரி புகார் || threaten from mp mla actress tara chaudhary complaint
Logo
சென்னை 11-10-2015 (ஞாயிற்றுக்கிழமை)
எம்.பி.-எம்.எல்.ஏ.வால் என் உயிருக்கு ஆபத்து: விபசார வழக்கில் சிக்கிய நடிகை தாராசவுத்ரி புகார்
எம்.பி.-எம்.எல்.ஏ.வால் என் உயிருக்கு ஆபத்து: விபசார வழக்கில் சிக்கிய நடிகை தாராசவுத்ரி புகார்
நகரி, ஜூலை.12-
 
பிரபல தெலுங்கு கவர்ச்சி நடிகை தாராசவுத்ரியை சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது, காங்கிரஸ் எம்.பி., ராயபாடி சாம்பசிவராவ், எம்எ.ல்.ஏ. வேணுகோபாலாச்சாரி, துணை கமிஷனர் சங்கர் ரெட்டி, டி.எஸ்.பி. மனோகர் ராவ் ஆகியோர்தான் என்னை விபசார வழக்கில் சிக்க வைத்தனர். எனக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டேன் என்று கூறி இருந்தார்.
 
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.அவர் நேற்று ஐதராபாத்தில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
 
என்னுடன் காங்கிரஸ் எம்.பி. ராயபாடி சாம்பசிவராவ், எம்.எல்.ஏ. வேணுகோபாலாச்சாரி ஆகியோர் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்தனர். இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டேன்.
 
இதனால் அவர்கள் போலீசார் மூலம் என்னை விபசார வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் கோபம் அடைந்த நான் என்னுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் பெயரை வெளியிடுவேன் என்று கூறினேன். இதனால் அவர்கள் எனக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
 
இதேபோல் என்னுடன் நட்பு வைத்திருந்த சில போலீஸ் அதிகாரிகளும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என் மீது பதிவு செய்யப்பட்ட விபசார வழக்குகளை சி.ஐ.டி. போலீசுக்கு மாற்ற வேண்டும்.
 
இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை கமிஷன் தலைவர் பெதபேரி ரெட்டி, இந்த வழக்கு ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி கோர்ட்டில் நடந்து வருவதால் இம்மனுவை மனித உரிமை கமிஷன் விசாரணைக்கு ஏற்க முடியாது. உங்கள் உயிருக்கு யார், யாரால் ஆபத்து இருக்கிறது என்பதை நாம்பள்ளி கோர்ட்டில் மனுவாக கொடுத்து பாதுகாப்பு கேளுங்கள் என்று கூறி நடிகை தாராசவுத்ரியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்