ஜாமீன் வழங்க லஞ்சம்: மேலும் 2 ஆந்திர நீதிபதிகள் சிக்கினர் வீடுகளில் அதிரடி சோதனை || bail give bribe andhara judge trap
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் உள்ள 39 இந்தியர்களின் குடும்பத்தின் சுஷ்மா சுவராஜ் உடன் சந்திப்பு
ஜாமீன் வழங்க லஞ்சம்: மேலும் 2 ஆந்திர நீதிபதிகள் சிக்கினர்- வீடுகளில் அதிரடி சோதனை
ஜாமீன் வழங்க லஞ்சம்: மேலும் 2 ஆந்திர நீதிபதிகள் சிக்கினர்-
வீடுகளில் அதிரடி சோதனை
ஐதராபாத், ஜூலை.12-

கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன் ரெட்டி ஆந்திர மாநிலம் ஓபுலாபுரத்தில் சட்ட விரோத சுரங்க தொழிலில் ஈடுபட்டதாக ஐதராபாத் பிரிவு சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களுக்கு பிறகு ஐதராபாத் சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பட்டாபி ராமராவ் ஜாமீன் வழங்கினார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. தரப்பில் புகார் செய்யப்பட்டது.

இதுபற்றி ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விசாரித்து நீதிபதி பட்டாபி ராமராவை சஸ்பெண்டு செய்து உத்தர விட்டார். இந்த வழக்கில் நீதிபதி பட்டாபி ராமராவ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். லஞ்ச பேரத்தில் ஈடுபட்ட அவரது மகன் ரவிச்சந்திரன், ஓய்வு பெற்ற நீதிபதி சலபதிராவ், ரவுடி மோதகிரி ராவ், ரியல் எஸ்டேட் அதிபர் ரவி சூர்ய பிரகாஷ்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான சூர்ய பிரகாஷ் பாபுவிடம் விசாரித்த போது இதில் மேலும் 2 நீதிபதிகளுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அவரது வாக்குமூலத்தின் மூலம் லஞ்ச விவகாரத்தில் மேலும் 2 நீதிபதிகள் சிக்கியுள்ளனர். ஒரு நீதிபதி பெயர் டி. பிரபாகர் ராவ். ஐகோர்ட்டு நீதிபதி அந்தஸ்தில் இருந்த இவர் மாநில தேர்தல் கமிஷனின் செயலாளராக (சட்டம்) பணிபுரிந்தார். பின்னர் ஸ்ரீகாகுளம் குடும்ப நல கோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டார். அவர் மீது லஞ்ச புகார் கூறப்பட்டதையடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இதே போல் மேலும் ஒரு நீதிபதியான லட்சுமி நரசிம்மராவை ஆந்திர ஐகோர்ட்டு நேற்று சஸ்பெண்டு செய்தது. அவர் நகர சிறு வழக்குகள் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார். ஜனார்த்தன் ரெட்டிக்கு ஜாமீன் வழங்குவதற்காக இவர்கள் இருவரும் மீடியேட்டர்களாக செயல்பட்டு ரியல் எஸ்டேட் அதிபர் ரவிசூர்ய பிரகாசுடன் பேச்சு நடத்தியுள்ளனர். இதில் ஜனார்த்தன் ரெட்டி சார்பில் அவரது சகோதரர் ஜி.எஸ்.ரெட்டி, உறவினர் தாசரத்ராம் ரெட்டி, கர்நாடக எம்.எல்.ஏ. சுரேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின்போது ஜனார்த்தன் ரெட்டியை ஜாமீனில் விடுதலை செய்ய ரூ. 10 கோடி பேரம் பேசப்பட்டது. இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு நீதிபதிகள் லட்சுமி நரசிம்மராவ், பிரபாகர்ராவ் ஆகியோர் தனியே ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்கள் சி.பி.ஐ. நீதிபதி பட்டாபிராமராவை சந்தித்து ரூ. 10 கோடி பேரம் பேசியதாக ரவி பிரகாஷ் தனது வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார். ஆனால் நீதிபதி பட்டாபி ராமராவ் அவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் தான் சம்பந்தப்பட்டவர்களை நேரில் பேச வேண்டும், தனது நம்பிக்கைக்கு பாத்திரமான நண்பரான சலபதிராவ் என்பவரிடம் பணத்தை கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக விசாரணை அதிகாரி ஒரு வர் கூறினார்.

சஸ்பெண்டு செய்யப்பட்ட 2 நீதிபதிகள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். சூரிய பிரகாஷ் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 2 நீதிபதிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இதில் நீதிபதிகளின் செல்போன்கள், லேப்-டாப்கள் கைப்பற்றப்பட்டது. அதில் முக்கிய ரகசியங்கள் சிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது நீதிபதி லட்சுமி நரசிம்மராவ் வீட்டில் இருந்தார். அவரை ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்றொரு நீதிபதியான பிரபாகர்ராவ் ஸ்ரீகாகுளம் குடும்ப நல கோர்ட்டு நீதி பதியாக மாற்றப்பட்டார். அவருக்கு குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணையின் முடிவில் 2 நீதிபதிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

குஜராத்தில் முதல்–மந்திரி மகளுக்கு அரசு நிலம் ஒதுக்கீடு: பிரதமர் மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு- பா.ஜனதா

ஆமதாபாத், பிப். 7–குஜராத்தில் முதல்–மந்திரி மகளுக்கு அரசு நிலம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடி மீது ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif