ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ஆ.ராசாவிடம் மீண்டும் விசாரணை அமலாக்கப்பிரிவு நடவடிக்கை || 2g spectrum corruption again enquiry raja
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ஆ.ராசாவிடம் மீண்டும் விசாரணை- அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
ஸ்பெக்ட்ரம் முறைகேடு: ஆ.ராசாவிடம் மீண்டும் விசாரணை-
அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
புதுடெல்லி, ஜூலை. 12-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய முறைகேடு கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய கணக்கு தணிக்கை துறை இந்த முறைகேடு ஊழலை அம்பலப்படுத்தியது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக சி.பி.ஐ. விசாரணையிலும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்கள் ஒவ்வொருவராக ஜாமீன் பெற்று விடுதலை ஆனார்கள். 15 மாத சிறை வாசத்துக்கு பின் கடந்த மே மாதம் ஆ.ராசா ஜாமீனில் வெளியே வந்தார். சி.பி.ஐ. கோர்ட்டில் அனுமதி பெற்று சென்னை வந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று பேட்டியளித்தார். பொதுக்கூட்டங்களிலும் இதை வலியுறுத்தி பேசி வந்தார்.

இந்த நிலையில் ஆ.ராசாவிடம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவினர் திடீர் விசாரணை நடத்தினார்கள். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ராசாவிடம் விசாரணை நடத்துவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ராசாவிடம் விசாரணை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை தொடர்ந்து நடந்த பணப்பரிமாற்றங்கள் மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தமாக பல்வேறு கிடுக்கிபிடி கேள்விகள் கேட்டதாக தெரிகிறது. தொலைத்தொடர்பு துறையில் ஆ.ராசா மேற்கொண்டதாக கூறப்படும் தன்னிச்சையான முடிவுகள் பற்றியும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட நிதி விவகாரங்கள் பற்றியும் அமலாக் கப்பிரிவினர் கேள்விகள் எழுப்பியதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் அனுமதி ஒதுக்கீடு மற்றும் அதையடுத்து நடைபெற்ற பணபரிமாற்றம் குறித்தே ராசாவிடம் அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அமலாக்கப்பிரிவு விசாரணைக்காக ஆஜராக சென்ற ராசா தன்னுடன் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை கொண்டு சென்று இருந்தார்.

அந்த ஆவணங்களை அதிகாரிகள் தங்கள் வசம் வாங்கி வைத்துக் கொண்டனர். இதற்கிடையே சில குறிப்பிட்ட தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கொடுத்த விஷயத்தில் ஆ.ராசா எடுத்த கொள்கை முடிவுகள் பற்றியும் அமலாக்கப்பிரிவு கேள்வி எழுப்பியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்தவர்கள் கைது: பாகிஸ்தான் தூதரக ஊழியருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையில் தலைமை ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif