பருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை || climate changed sea algae missing
Logo
சென்னை 28-02-2015 (சனிக்கிழமை)
பருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பருவ நிலை மாற்றத்தால் கடல் பாசிகள் மாயம்: மீன்கள் அழியும் ஆபத்து- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நியூயார்க், ஜூலை. 12-
 
பருவ நிலை மாற்றத்தால் கடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை அழிவுகள் உருவாகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் 2600 விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
 
பருவ நிலை மாற்றம் கடலில் தரை பகுதியை கடுமையாக பாதித்துள்ளது. கடல் நீர் தொடர்ந்து வெப்பமாக மாறி வருகிறது. இதனால் இயற்கை சூழ்நிலை மாறி கடலில் உள்ள பொருட்கள் அழிய தொடங்கி உள்ளன.
 
குறிப்பாக கடல் பாசி, தாவரங்கள், பவள பாறைகள் போன்றவை அழிந்து வருகின்றன. இவை இருந்தால்தான் மீன்கள் வளர முடியும், உணவும் கிடைக்கும். சூழ்நிலை மாறி வருவதால் மீன்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவையும் அழியும் நிலையில் உள்ளன.
 
கரீபியன் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்குள் 75ல் இருந்து 85 சதவீதம் வரை பவள பாறைகள் அழிந்து உள்ளன. அதேபோல ஆஸ்திரேலிய கடல் பகுதியிலும் பவள பாறை மற்றும் கடல் பாசிகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன.
 
ஆசிய கடல் பகுதியில் இந்தோனேஷியா, மலேசியா, பவுபாநியூகினியா, பிலிப்பைன்ஸ் பகுதியில் கடல் பவள பாறைகள் அழிவது அதிகமாக உள்ளது. அங்கு 30 சதவீத கடல் பாசி தாவரங்கள் அழிந்து விட்டன.
 
இந்த பகுதியில் 3 ஆயிரம் அரியவகை மீன்கள் அழியும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்துவிடும். எனவே இதை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சத்தமாக பேசினால் மூளை இயங்காது

மனித மூளையில் ‘புரோகா’ என்ற ஒரு பகுதி, நாம் பேசுவதை கட்டுப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif