மிருக காட்சி சாலையில் சுற்றுலா பயணியை புலி கடித்து கொன்றது || zoo tiger attack Tourist passenge killed
Logo
சென்னை 29-07-2015 (புதன்கிழமை)
  • அப்துல் கலாம் உடலுடன் சிறப்பு இராணுவ விமானம் டெல்லியிருந்து மதுரைக்கு புறப்பட்டது
மிருக காட்சி சாலையில் சுற்றுலா பயணியை புலி கடித்து கொன்றது
மிருக காட்சி சாலையில் சுற்றுலா பயணியை புலி கடித்து கொன்றது
கோபன்கெகன், ஜூலை. 12-

டென்மார்க்கில் உள்ள கோபன்கெகன் நகரில் மிருக காட்சி சாலை உள்ளது. ஒரு கூண்டில் புலி அடைக்கப்பட்டிருந்தது. இந்த கூண்டுக்குள் சுற்றுலா பயணி ஒருவர் புலியால் கடித்து கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பெயர் லார்ஸ்போர்க் (வயது 22) என்பது தெரியவந்தது.

புலி அவரது கழுத்தை கடித்து கொன்றிருந்தது. அவர் எப்படி புலி கூண்டுக்குள் சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் நடக்கும் போது அருகில் யாரும் இல்லை. இதனால் அவரை காப்பாற்றவும் முடிய வில்லை.

ஒருவேளை அவர் தற்கொலை செய்வதற்காக புலிக்கூண்டுக்குள் குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்தார். ஆனால் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் வெளியிட வில்லை.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

9 மாதங்களில் 45 முறை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட 14 வயது மாணவர்

இங்கிலாந்தில் 14 வயது மாணவர் ஒருவர் 45 முறை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ....»

MM-TRC-B.gif