கோடம்பாக்கம் மண்டபத்தில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ரசிகர்களிடம் நேரில் வாழ்த்து பெறுகிறார் || poet vairamuthu birthday in kodambakkam hall
Logo
சென்னை 14-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
கோடம்பாக்கம் மண்டபத்தில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா: ரசிகர்களிடம் நேரில் வாழ்த்து பெறுகிறார்
கோடம்பாக்கம் மண்டபத்தில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா:
ரசிகர்களிடம் நேரில் வாழ்த்து பெறுகிறார்
சென்னை, ஜூலை. 12-
 
கவிஞர் வைரமுத்துவுக்கு நாளை (வெள்ளி) பிறந்த நாளாகும். இதையொட்டி நாளை காலை 8 மணிக்கு கடற்கரையில் உள்ள கவிஞர்களின் சிலைகளுக்கு வெற்றித் தமிழர் பேரவை நண்பர்களோடு சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
 
கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெறுகிறார். காலை 10 மணி முதல் கோடம்பாக்கம் பொன் மணி மாளிகை திருமண மண்டபத்தில் அனைவரின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்கிறார். நண்பர்களோடும் உறவினர்களோடும் அங்கே மதிய உணவு சாப்பிடுகிறார்.  
 
கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் புதிய நாவல் 'மூன்றாம் உலகப்போர்'. புவி வெப்பமாதல் உலகமயமாதல் என்ற உலகத்துயரங்கள், ஒரு கிராமத்து விவசாயி வாழ்வில் ஏற்படும் விளைவுகளை உலக இலக்கியமாகப் படைத்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
 
40 வாரங்கள் ஒரு வார இதழில் தொடராக வெளி வந்த மூன்றாம் உலகப்போர் இப்போது நூலாக வெளி வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி விழாவுக்குத் தலைமையேற்று நூலை வெளியிடுகிறார். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.
 
நடிகர் கமலஹாசன் வாழ்த்திப் பேசுகிறார். கவி ஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார். வாசகர் வார்த்தைகள் என்ற தலைப்பில் பத்து வாசகர்கள் ஆளுக்கு ஒரு நிமிடம் உரையாற்றுகிறார்கள். விழாவில் மூன்றாம் உலகப் போரும் புவி வெப்பமாதலும் என்ற குறும்படம் திரையிடப்படும்.
 
விழாவுக்கான ஏற்பாடுகளை வெற்றித் தமிழர் பேரவையைச் சேர்ந்த ராஜசேகர், காதர்மைதீன், வி.பி.குமார், தமிழரசு, செல்லத்துரை, சாந்தி தணிகாசலம், தன்ராஜ், மின்னல் பிரியன், கலைமதி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த துருக்கிக்கு போர் விமானங்களை அனுப்புகிறது சவூதி அரேபியா

இஸ்தான்புல், பிப்.14 சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக நேட்டோ உறுப்பினரான துருக்கிக்கு சவூதி அரேபியா ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif