விரைவில் ஜெயிலில் இருந்து வெளியே வருவேன்: தொண்டர்களிடம் வீரபாண்டி ஆறுமுகம் உருக்கம் || release from jail soon veerapandi arumugam informations
Logo
சென்னை 27-03-2015 (வெள்ளிக்கிழமை)
விரைவில் ஜெயிலில் இருந்து வெளியே வருவேன்: தொண்டர்களிடம் வீரபாண்டி ஆறுமுகம் உருக்கம்
விரைவில் ஜெயிலில் இருந்து வெளியே வருவேன்: தொண்டர்களிடம் வீரபாண்டி ஆறுமுகம் உருக்கம்
சேலம், ஜூலை.12-
 
சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள குடிசை வீடுகளுக்கு தீவைத்தாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்ட வழக்குகளை ஆராயும் ஆலோசனைக் குழு வீரபாண்டி ஆறுமுகம் மீதான வழக்கு பற்றி நேற்று விசாரணை மேற்கொண்டது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த விசரணை நடந்தது.
 
இதையொட்டி வீரபாண்டி ஆறுமுகம் நேற்று வேலூர் ஜெயிலில் இருந்து சென்னை அழைத்து செல்லப்பட்டு ஆலோசனைக்குழு முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணை நடத்துவதற்கு முன்பு அவர் அங்குள்ள மரத்தடியில் நாற்காலி போடப்பட்டு அதில் அமர்ந்திருந்தார்.
 
அப்போது அவரை சேலத்தில் இருந்து சென்ற திரளான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். அவர்களுக்கு வீரபாண்டி ஆறுமுகம் ஆறுதல் கூறினார். அப்போது அவர் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் கூறியதாவது:-
 
பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் அடைத்துள்ளனர். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன். என் மீது பழி வாங்கும் நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான் விரைவில் வெளியில் வந்து விடுவேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்த விசாரணை முடிந்து பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் இரவு அழைத்து செல்லப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்த அவரது மகனும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வீரபாண்டி ராஜா கூறியதாவது:-
 
தலைவர் நன்றாக இருக்கிறார். ஆனால் வேலூர் ஜெயில் பகுதியில் கடும் வெயில் அடிப்பதால் அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். வெயில்தான் அதிகம்.இதை தாங்க முடியவில்லை என என்னிடம் அவர் கூறினார். அவ்வப்போது மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாக தெரிவித்தார். .
 
பார்வையாளர்களை பார்க்க 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வர சிரமமாக உள்ளது என்றும் கூறினார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
வீரபாண்டி ஆறுமுகத்தை மாவட்ட துணை செயலாளரும், எம்.எல்.ஏவுமான எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏவும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா, மகள் மகேஸ்வரி, தாரைமணியன், முன்னாள் மாநகர துணை செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் மாணிக்கம், வெண்ணிலாசேகர், பகுதி செயலாளர்கள் சா.சுப்பிரமணி, பாண்டித் துரை, முன்னாள் கவுன்சிலர்கள் கேபிள் சுந்தர், லாரி பழனிச்சாமி உள்பட பலர் பார்த்து நலம் விசாரித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஒடிசாவில் 2014ம் ஆண்டில் 2011 கற்பழிப்பு வழக்குகள்: மாநில அரசு வெள்ளை அறிக்கை

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2011 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு வெள்ளை ....»