மாதவரத்தில் மாம்பழ குடோனில் தீ: 46 கடைகள் எரிந்தன || madhavaram mango godown fire
Logo
சென்னை 24-07-2014 (வியாழக்கிழமை)
  • காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல்: ஒருவர் பலி
  • நீலகிரியில் கனமழை: கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • பூடான் - சீனா இடையேயான எல்லை பிரச்சனை: இன்று பேச்சுவார்த்தை
  • ராகுல் 25-ம் தேதி அமேதிக்கு பயணம்
மாதவரத்தில் மாம்பழ குடோனில் தீ: 46 கடைகள் எரிந்தன
மாதவரத்தில் மாம்பழ குடோனில் தீ: 46 கடைகள் எரிந்தன
மாதவரம், ஜூலை. 12-

சென்னை மாதவரம் பஜாரில் மாம்பழ குடோன் உள்ளது. இங்கு ஊத்துக் கோட்டை, ஆந்திர மாநிலம் சத்தியபேடு மற்றும் பிற பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் வரவழைக்கப்படும். இங்கிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு வியாபாரிகள் இந்த மாம்பழங்களை வாங்கிச் சென்று விற்பனை செய்வார்கள்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மாம்பழ குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. உடனடியாக தீ மற்ற கடைகளுக்கும் கொழுத்து விட்டு எரிந்தது. இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாரிமுனை, செம்பியம், மணலி, செங்குன்றம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 24 மாம்பழ குடோன்கள், 10 காய்கறி கடைகள், 2 மளிகை கடைகள், 10 பழக்கடைகள் என மொத்தம் 46 கடைகள் எரிந்து சாம்பலானது.

சேத மதிப்பு ரூ. 50 லட்சம் ஆகும். தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மாதவரம் துணை கமிஷனர் லட்சுமி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். முன்விரோதம் காரணமாக யாராவது மாம்பழ குடோனுக்கு தீ வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீ விபத்து நடந்த மாம்பழ குடோனை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பார்வையிட்டார். வியாபாரிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார். அவருடன் மாதவரம் மண்டல குழு தலைவர் வேலாயுபதம், கவுன்சிலர் தட்சணாமூர்த்தி ஆகியோர் சென்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்