18 ந்தேதி, அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு || jayalalitha announcement 18 date meeting admk mp mla
Logo
சென்னை 24-10-2014 (வெள்ளிக்கிழமை)
18-ந்தேதி, அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
18-ந்தேதி, அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜூலை.12-

ஜனாதிபதி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். இப்போது அவரை பாரதீய ஜனதா உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரிக்கின்றன.

ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எம்.பி.க்களுக்கான ஓட்டுப்பதிவு டெல்லி பாராளுமன்ற கட்டிடத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில தலைநகரங்களிலும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் சென்னை சட்டசபை கூட்டத்தில் ஓட்டுப் போட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வருகிற 18-ந்தேதி அ.தி.மு.க.வின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு, சென்னை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஏன் தவறாமல் ஓட்டுப் போட வேண்டும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

19-ந்தேதி சென்னையில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதால் 18-ந்தேதியே அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சென்னை வருகிறார்கள். அன்று மாலை 4 மணிக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா 19-ந்தேதி காலை சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவிலும் பங்கேற்று தனது வாக்கை பதிவு செய்கிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம்: அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் ....»

Maalaimalar.gif
Maalaimalar.gif