தேசிய ஜுனியர் நீச்சல் போட்டி: முதல் நாளில் தமிழகத்துக்கு 3 தங்கப்பதக்கம் || tamilnadu gets 3 gold in national junior swimming championship
Logo
சென்னை 02-09-2014 (செவ்வாய்க்கிழமை)
தேசிய ஜுனியர் நீச்சல் போட்டி: முதல் நாளில் தமிழகத்துக்கு 3 தங்கப்பதக்கம்
தேசிய ஜுனியர் நீச்சல் போட்டி: முதல் நாளில் தமிழகத்துக்கு 3 தங்கப்பதக்கம்
சென்னை, ஜுலை.12-

தேசிய ஜுனியர் நீச்சல் போட்டியில் முதல் நாளான நேற்று தமிழகத்துக்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 39-வது தேசிய ஜுனியர் நீச்சல் சாம்பியன்ஷிப்போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் நேற்று தொடங்கியது. 15-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 1000 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்க விழாவில் பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழாவில் இந்திய நீச்சல் சம்மேளன பொதுச் செயலாளர் கமலேஷ் ஞானாவதி, தமிழ்நாடு நீச்சல் சங்க தலைவர் ஜே.எஸ்.சோப்ரா, செயலாளர் நைனார் ஆசாரி, துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை நடந்த பெண்களுக்கான குரூப்1 பிரிவில் 200 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் தமிழக வீராங்கனை அனுஷா மேத்தா (2:10.81 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான குரூப்2 பிரிவில் 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை ஏ.வி.ஜெயவீனா 1:17.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் கடந்த ஆண்டில் தான் படைத்து இருந்த (1:19.02 வினாடி) சாதனையை தகர்த்தார்.

ஆண்களுக்கான குரூப்2 பிரிவில் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீரர் பி.முகுந்தன் (1:06.21 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார். இவர் சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி சந்திரசேகரிடம் பயிற்சி பெற்று வருகிறார். தமிழக வீரர்கள் ஆதர்ஷ் நாராயணன் (குரூப்1, 200 மீட்டர் பிரீஸ்டைல்), ஸ்ரீனிராம் (குரூப்2, 200 மீட்டர் பிரீஸ்டைல்), சேது மாணிக்கவேல் (குரூப்1, 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்) ஆகியோர் வெண்கலப்பதக்கமும், வீராங்கனைகள் ஷெர்லின் (குரூப்2, 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்) வெள்ளிப்பதக்கமும், சுஷ்மிதா (குரூப்1, 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்