ஒலிம்பிக் போட்டிக்கு சிறிய அணியை அனுப்பும் ஆஸ்திரேலியா, சீனா || Australia China Sending a small team at the Olympic Games
Logo
சென்னை 23-08-2014 (சனிக்கிழமை)
  • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் 2 பேர் பலி
  • பல்லாவரம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி
  • இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு
ஒலிம்பிக் போட்டிக்கு சிறிய அணியை அனுப்பும் ஆஸ்திரேலியா, சீனா
ஒலிம்பிக் போட்டிக்கு சிறிய அணியை அனுப்பும் ஆஸ்திரேலியா, சீனா
சிட்னி, ஜுலை.12-
 
ஒலிம்பிக் போட்டி வருகிற 27-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் 410 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறிய ஒலிம்பிக் அணி இதுவாகும். கடைசியாக 1992-ம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக்கில் 290 பேர் கொண்ட குழுவை ஆஸ்திரேலியா அனுப்பியிருந்தது.
 
ஆஸ்திரேலிய அணியில் 224 வீரர்களும், 186 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இதில் 46 பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள். ஒலிம்பிக் அணியில் இடம் பெற்றுள்ள அதிக வயதுடையவர் மேரி ஹன்னா. குதிரையேற்ற வீராங்கனையான இவரது வயது 57.
 
குறைந்த வயது உடையவர் டைவிங் வீராங்கனை பிரிட்டானி பிராபென். இவரது வயது 16. குதிரையேற்ற வீரர் ஆண்ட்ரூ ராய் 7-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். டேவிட் மற்றும் ஹைய்லெ சாப்மன் தந்தை-மகள் ஆவர். இவர்கள் துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் வகிக்கிறார்கள்.
 
இதே போல் சீனாவும் தங்கள் அணி வீரர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் 639 பேர் கொண்ட மிகப்பெரிய அணியை களம் இறக்கிய சீனா இந்த ஒலிம்பிக்குக்கு 396 வீரர்-வீராங்கனைகளை மட்டுமே தேர்வு செய்திருக்கிறது. இருப்பினும் 2008 ஒலிம்பிக்கை போன்றே இந்த முறையும் முதலிடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை நீக்கம்

சேலம், ஆக. 23–கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜ ....»