இந்தி நடிகர் மல்யுத்த வீரர் தாராசிங் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது || famous hindi actor dara singh died
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
இந்தி நடிகர்-மல்யுத்த வீரர் தாராசிங் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது
இந்தி நடிகர்-மல்யுத்த வீரர் தாராசிங் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது
மும்பை, ஜூலை. 12-
 
சங்டில், வதன் சீ டூர், ரஷ்டம்-இ-பாக்தாத், ஷேர்தில், சிக்கந்தர் ஜி அஜம், ராகா, மேரா நாம் ஜோக்கர், தரம்கரம், மார்த் உள்பட ஏராளமான இந்திப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தாராசிங்.
 
1929-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த இவர், திரையுலகுக்கு வருவதற்கு முன்பு புகழ்பெற்ற மல்யுத்த வீரராக இருந்தார். காமன்வெல்த் போட்டியில் 1959-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்று சிறப்பு சேர்த்தார்.
 
தமிழில் ரஜினியுடன் மாவீரன் படத்தில் நடித்துள்ளார். 2007-ம் ஆண்டு ஜேப் வீ பேட் என்ற படம் தான் இவர் நடித்த கடைசி படமாகும். திரையுலகுக்கு முழுக்கு போட்ட பிறகு சில டி.வி. தொடர்களில் நடித்தார். ராமாயணம் தொடரில் அனுமன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார்.
 
பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்ட அவர் 2003-ல் மேல்-சபை எம்.பி. ஆக தேர்வானார். 2009 வரை அவர் எம்.பி. ஆக இருந்தார்.அதன் பிறகு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்.
 
84 வயதான அவருக்கு கடந்த 7-ந்தேதி கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள கோகிலா பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக அவருக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று காலை தாரா சிங்குக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்ட போது, அவரது மூளை செயல் இழந்து வருவது தெரியவந்தது. எனவே இனி அவர் பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் முடிவுக்கு வந்தனர்.
 
இதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். மாரடைப்பு தீவிரம் காரணமாக அவரது மூளைக்கு கிடைக்க வேண்டிய ஆக்ஜிசன் நேற்றிரவு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இன்று காலை 7.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
 
அமைதியான முறையில் அவர் மரணம் அடைந்ததாக டாக்டர் ராம்நாராயண் கூறினார். தாராசிங் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், இந்தி திரையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
 
மத்திய மந்திரி அம்பிகாசோனி, பா.ஜ.க. தலைவர் அத்வானி, நிதின்கட்காரி உள்பட பலர் தாராசிங் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளனர். நல்ல உயரம் மற்றும் ஆஜானுபாகுவுடன் திகழ்ந்த தாராசிங்குக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
 
இந்தி படங்கள் தவிர சில பஞ்சாபி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். 1928-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி பஞ்சாபில் தரம்சக் கிராமத்தில் பல்வந்த்சிங்-ரந்தவா தம்பதிக்கு மகனாக பிறந்த தாராசிங் தன் உடல் வலிமை காரணமாகவே மல்யுத்தத்தில் தேர்ச்சி பெற்றார். 
 
உலகின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் கிங்காங் (ஆஸ்திரேலியா), ஜார்ஜ் (கனடா) ஜான் டெசில்வா (நியூசிலாந்து) ஆகியோருக்கு இணையாக தாராசிங் புகழ்பெற்றார்.
 
சுமார் 500 மல்யுத்த போட்டிகளில் வென்றிருப்பதை வைத்தே அவரது மல்யுத்த சிறப்பை உணரலாம். 1983-ம் ஆண்டு வரை அவர் மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
 
டெல்லியில் ராஜீவ் காந்தி முன்னிலையில் நடந்த கடைசிப் போட்டியில் வென்ற அவர் ஜெயில்சிங்கிடம் பரிசு பெற்றார்.சினிமா படத் தயாரிப்பாளர், டைரக்டர் என்று பல அவதாரம் எடுத்த தாராசிங், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தாரா ஸ்டூடியோ என்ற படப்பிடிப்பு அரங்கை கட்டினார்.
 
இந்த ஸ்டூடியோவில் எல்லா நவீன வசதிகளும் இருக்கிறது. 8 படங்களை அவர் இயக்கியுள்ளார். 2 படங்களை தயாரித்துள்ளார். 1967-ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய அவர் 2007-ம் ஆண்டு வரை 90 படங்களில் நடித்து முடித்திருந்தார்.
 
கடைசி படமான ஜாப் வீ மேட் படத்தில் அவர் கரீனாகபூரின் தாத்தாவாக நடித்திருந்தார். அவருக்கு முதல் மனைவி மூலம் பர்து மன்சிங் என்ற மகனும், 2-வது மனைவி மூலம் 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தேர்தல் வெற்றி கொண்டாட்ட விழாவில் துப்பாக்கிச் சூடு: குண்டு பாய்ந்து சிறுவன் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் நடத்திய தேர்தல் வெற்றிவிழா ஊர்வலத்தில் உற்சாகமிகுதியில் ஒருவர் துப்பாக்கிச் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif